போதைப்பொருள்: ‘கடும் அணுகுமுறை நீடிக்கும்’

சிங்­கப்­பூ­ரில் போதைப்­பொ­ரு­ளைச் சட்­ட­வி­ரோ­த­மா­கப் புழங்கி கைதா­ன­வர்­க­ளின் எண்­ணிக்கை கடந்த 1990களில் ஆண்­டுக்கு ஏறத்­தாழ 6,000 ஆக இருந்­தது.

இந்த எண்­ணிக்கை இப்­போது பாதி­யா­கக் குறைந்­து­விட்­டது. இருந்­தா­லும்­கூட போதைப்­பொ­ருள் குற்­றங்­க­ளுக்கு எதி­ரான சிங்­கப்­பூ­ரின் கடு­மை­யான அணு­கு­முறை நீண்­ட­கா­லத்­திற்குத் தொடர்ந்து இருந்து வரும் என்று உள்­துறை, சட்ட அமைச்­சர் கா சண்­மு­கம் தெரி­வித்து இருக்­கி­றார்.

"போக்­கு­வ­ரத்து மைய­மாக இருக்­கின்ற சிங்­கப்­பூ­ரில் கடு­மை­யான சட்­டதிட்­டங்­கள் இல்லை என்­றால், போதைப்­பொ­ருள் புழக்­கத்­தைக் கண்­டு­பி­டித்து அதை ஒடுக்க அம­லாக்க நட­வ­டிக்­கை­கள் செம்­மை­யா­ன­வை­யாக இல்லை என்­றால், நாட்­டின் உள்ளே போதைப்­பொ­ருள் புகுந்­து­வி­டும்," என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

சிறிய ஒரு நாடு என்ற முறை­யில் சட்­ட­வி­ரோத போதைப்­பொ­ருள் செயல்­களை அறவே சகித்­துக் கொள்­ளாத அணு­கு­மு­றை­யை சிங்­கப்­பூர் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்று அண்­மை­யில் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் திரு சண்­மு­கம் குறிப்­பிட்டார்.

மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்புப் பிரி­வின் 50வது ஆண்டைக் குறிக்­கும் வகை­யில் அமைச்­ச­ரி­டம் கேட்­கப்­பட்ட கேள்­வி­க­ளுக்குத் திரு சண்­மு­கம் பதி­ல­ளித்­தார்.

பல நாடு­களில் பர­வ­லான போதைப் பித்து கார­ண­மாக பெரும் பாதிப்­பு­கள் ஏற்­பட்டு இருக்­கின்­றன என்­பதைச் சுட்­டிய அமைச்­சர், அத்­தகைய பாதிப்­பு­கள் நமக்குத் தாங்­காது என்று குறிப்­பிட்­டார்.

இவ்­வே­ளை­யில், உல­கி­லேயே போதைப்­பொ­ருளை ஆக அதி­க­மாக உற்­பத்தி செய்­கின்ற ஒரு பகு­திக்கு அருகே சிங்­கப்­பூர் அமைந்து இருப்­பதை மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரி­வின் இயக்­கு­ந­ரான இங் செர் சோங் சுட்­டிக்­காட்­டி­னார்.

தங்க முக்­கோ­ணம் என்று குறிப்­பி­டப்­படும் அந்­தப் பகுதி தாய்­லாந்து, லாவோஸ், மியன்­மார் எல்­லை­கள் சந்­திக்­கும் இடத்­தில் அமைந்து இருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!