தென்மேற்கு மாவட்ட குடும்பங்களுக்கு 300 மடிக்கணினிகள்

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­க (என்டியு) ஏற்­பாட்­டில் 300 குடும்பங்களுக்கு இல­வ­ச­மாக மடிக்­க­ணினி வழங்­கப்­பட்டுள்­ளது.

தென்­மேற்கு சுவா சூ காங் பகுதியில் வசிக்­கும் வசதி குறைந்த குடும்­பங்­கள், ‘சேவை வாரம்’ என்ற நிகழ்ச்­சி­யின் ஒரு பகுதியாக அந்த கணி­னி­க­ளைப் பெற்றுள்ளனர்.

இந்­தப் பல்­க­லைக்­க­ழ­கம் ‘என்டியு சேவை வாரம்’ என்ற ஒரு நிகழ்ச்­சியை நேற்று தொடங்­கி­யது. 30வது ஆண்­டு­வி­ழா­வைக் குறிக்­கும் வகை­யில் இடம்­பெ­றும் அந்த நிகழ்ச்சி இம்­மா­தம் 29ஆம் தேதி வரை நீடிக்­கும்.

இந்­தப் பல்­க­லைக்­க­ழக பள்ளிகள், மாண­வர் மன­ம­கிழ் மன்றங்­கள், துறை­கள், முன்­னாள் மாண­வர் சங்­கங்­கள் ஆகி­ய­வற்றைச் சேர்ந்த 300க்கும் மேற்­பட்ட தொண்­டூ­ழி­யர்­கள் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பல்­வேறு சமூக சேவை திட்­டங்­களில் கலந்­து­கொள்ள கையெ­ழுத்­திட்டு இருக்­கி­றார்­கள்.

அவற்­றின் மூலம் சிங்­கப்­பூ­ரி­லும் கம்­போ­டியா, மலே­சியா போன்ற வட்­டார நாடு­க­ளி­லும் 5,000 பேர் நன்­மை­ய­டை­வார்­கள் என்று மதிப்­பி­டப்­ப­டு­கிறது.

மின்­னி­லக்­க­ம­யம், சுகா­தார நல்­வாழ்வு, சமூக நல்­வாழ்வு, இயற்கை வளங்­க­ளைக் கட்­டிக்­காப்­பது ஆகிய துறை­களில் அந்­தப் பல்­வேறு சேவைத் திட்­டங்­களும் ஒரு­மித்த கவ­னம் செலுத்­து­கின்­றன.

இந்­தத் திட்ட தொண்­டூ­ழி­யர்­கள் இதர பல வழி­க­ளி­லும் மாண­வர்­களுக்­கும் முதி­ய­வர்­க­ளுக்­கும் உதவி வரு­கி­றார்­கள். நன்­யாங் பல்­க­லை சேவை வாரத்தை தென்­மேற்கு மாவட்ட மேயர் லோ யென் லிங்­கும் பல்­க­லைக்­க­ழ­கத் தலை­வர் பேரா­சி­ரி­யர் சுப்ரா சுரே­ஷும் நேற்று தொடங்கி வைத்­த­னர்.

தென்­மேற்கு மாவட்­டத்­தில் வசதி குறைந்த மக்­கள் மேம்­பட உத­வும் பல்­வேறு திட்­டங்­களில் இப் பல்­க­லைக்­க­ழ­கம் தன்­ நேரத்தை ­யும் ஆற்­ற­லை­யும் ஆத­ர­வை­யும் வழங்கி வரு­வதாக நிகழ்ச்­சி­யில் பேசிய திரு­வாட்டி லோ கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!