சமய ஊர்வல நிகழ்ச்சி: காவல்துறை ஆராய்கிறது

சமய ஊர்வல நிகழ்ச்சி: காவல்துறை ஆராய்கிறது

1 mins read
24dabee5-c0fd-4531-b50a-0f6632d8165c
மக்கள் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இசைச்கருவிகளை வாசித்துக் கொண்டும் இருந்ததைக் காணொளிகளும் படங்களும் காட்டின. படங்கள்: வாட்ஸ்அப் -

சிங்­கப்­பூ­ரில் தொழிற்­பேட்டை ஒன்றில் ஒரு சமய ஊர்­வ­லத்­தில் பலர் பங்­கெ­டுத்­துக் கொண்­ட­தா­கக் கூறப்­படும் ஒரு நிகழ்ச்சி பற்றி காவல்துறை ஆராய்ந்து வரு­கிறது.

அந்­தச் சம்­ப­வத்­தைக் காட்­டும் காணொ­ளி­களும் புகைப்­ப­டங்­களும் சமூக ஊட­கங்­களில் பரவி வரு­வது தெரி­யும் என்று காவல் துறை தெரி­வித்­தது.

அந்­தக் காணொ­ளி­க­ளி­லும் புகைப்­ப­டங்­க­ளி­லும் சிலர் ஆடிப் பாடு­வ­து­டன் மத்­த­ளம் அடிப்­ப­தும் தெரி­கிறது. குறைந்­தது ஒரு­வர் காவடி எடுப்­ப­தும் அவற்­றில் தெரிந்­தது.

காணொ­ளி­களில் பல்­வேறு இனத்­த­வர் முகக்­க­வ­சம் அணி­யா­மல் பாடிக்­கொண்டு வளா­கத்­துக்­குள் கார்­கள் செல்­லும் சுழல்­பா­தை­யில் நடந்­து­சென்­றது காணப்­பட்­டது.

வேறொரு காணொ­ளி­யில் ஆட­வர் ஒரு­வர் தேர் இழுத்­துச் சென்­ற­தா­கத் தெரிந்­தது.

மற்­றொரு காணொ­ளி­யில், தற்­கா­லிக வழி­பாட்டு இட­மா­கத் தெரி­யும் ஓர் இடத்­தின் முன்­னால் ஒரு­வர் காவடி தூக்கி ஆடு­வது போலத் தெரிந்­தது.

அந்­தச் சம்­ப­வம் குறித்த கேள்விக­ளுக்­குப் பதில் அளித்து காவல்துறை கடந்த வெள்­ளிக்­கி­ழமை அறிக்கை விடுத்­தது.

ஜூரோங் அருகே உள்ள 'தோ குவான் ரோடு ஈஸ்ட்­டில்' உள்ள தொழி­லி­யல் கட்­ட­டத்­தில் சமய ஊர்­வ­லம் நடந்­த­தா­கக் கூறப்­படு­வ­தைப் பற்றி, உரிய அதி­காரி­களு­டன் இணைந்து ஆராய்ந்து வரு­வ­தாக அதில் காவல்துறை கூறி­யது.

தேங் ரோட்டில் உள்ள அருள் மிகு தெண்­டா­யு­த­பாணி கோயி­லில், ஜன­வரி 18 அன்று இந்த ஆண்­டின் தைப்­பூ­சத் திரு­விழா கடுமையான கட்­டுப்­பாடு­க­ளுடன் நடந்­தது.

அதில் சுமார் 14,000 பேர் கலந்துகொண்­ட­னர்.