செயின்ட் ஜான்ஸ் தீவில் வாடகை சைக்கிள் சேவை

செயின்ட் ஜான்ஸ் தீவில் சைக்கிள்­களை வாட­கைக்­குத் தரும் கூடா­ரம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. இதன் தொடர்­பில் சென்ற ஆண்டு நடத்­தப்­பட்ட சோதனை வெற்­றி­க­ர­மாக நடந்­த­தைத் தொடர்ந்து இந்­தச் சேவை வழங்கப்­ப­ட­வுள்­ளது.

சென்ற ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்­டம்­பர் மாதம் வரை சோதனை நடத்­தப்­பட்­டது. அதற்கு நல்ல வர­வேற்பு கிடைத்­த­தாக ‘எஸ்­டிசி’ எனும் செந்­தோசா மேம்­பாட்­டுக் கழ­கம் தெரி­வித்­தது. வாடகை சைக்­கிள் கூடா­ரத்தை நடத்­து­வோரை அந்­தக் கழ­கம் நிய­மிக்­கும்.

தெற்­குத் தீவு­களை நிர்­வ­கிக்­கும் சிங்கப்பூர் நில ஆணை­யத்­து­டன் செந்­தோசா மேம்­பாட்­டுக் கழ­கம் இணைந்து செயல்­படும். ஒவ்­வோர் ஈராண்­டு­க­ளுக்­கும் வாடகை சைக்­கிள் கூடா­ரம் இயங்கும்.

செயின்ட் ஜான்ஸ் தீவின் படகு நிறுத்­தத்­திற்கு சுமார் 400 மீட்­டர் தொலை­வில் வாடகை சைக்­கிள் கூடா­ரம் அமைந்­தி­ருக்­கும். மரீனா சவுத் பிய­ரி­லி­ருந்து வரும் பார்­வை­யா­ளர்­கள் அங்­கு­தான் படகிலி­ருந்து இறங்­கு­வர். லஸா­ரஸ், செரிங்­காட் உள்­ளிட்ட தீவு­கள் செயிட்ஸ் ஜான்­ஸு­டன் நிலம்­வழி இணைக்­கப்­பட்­டுள்­ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!