தயார் நிலையில் இருக்கும் உணவு, பானக் கடைகள்

அதிக எண்­ணிக்­கை­யில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­னா­லும் நிலை­மை­யைச் சமா­ளிக்க மாற்று ஏற்­பா­டு­க­ளைப் பெரும்­பா­லான உணவு, பானக் கடை­கள் செய்து வைத்­துள்­ளன. சிங்­கப்­பூர் உண­வகச் சங்­கத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் இதைத் தெரி­வித்­தார். வெவ்­வேறு நேரங்­களில் ஊழி­யர்­களை பணியில் ஈடுபடுத்துவது, பல்­வேறு கிளை­களில் அவர்­க­ளை வேலைக்கு அனுப்பாமல் இருப்­பது போன்­றவை அவற்­றில் அடங்­கும்.

"முன்­னணிப் பணியாளர்கள் பாது­காப்­பாக இருப்­பதை உறு­தி­செய்ய முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக அனைத்து உணவு, பானக் கடை­களும் விதி­மு­றை­க­ளின்­படி பரி­சோ­த­னை­களை மேற்­கொண்டு வரு­கின்­றன," என்று உண­வகச் சங்­கத்­தின் பேச்­சா­ளர் குறிப்­பிட்டார்.

கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­து­வ­ரும் வேளை­யில் முடிந்­த­வரை வர்த்­த­கம் பாதிப்­படை­யா­மல் இருக்க தகுந்த நட­வடிக்­கை­களை எடுக்­கு­மா­றும் பாது­காப்பு விதி­மு­றை­களை அணுக்­க­மா­கப் பின்­பற்­று­மா­றும் அர­சாங்­கம் நிறு­வ­னங்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டது.

அதைத் தொடர்ந்து ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸின் கேள்­வி­களுக்கு உண­வகச் சங்­கம் பதி­ல­ளித்­தது. மனி­த­வ­ளப் பற்­றாக்­குறை ஏற்­பட்­டால் அதைச் சமா­ளிக்க நிறு­வ­னங்­கள் தயா­ராய் இருக்­க­வேண்­டும் என்­றும் அர­சாங்­கம் சுட்­டி­யது.

கொள்­ளை­நோய்ப் பர­வல் தொடங்­கி­ய­தி­லி­ருந்தே உணவு, பானத் துறை மனி­த­வ­ளப் பற்­றாக்­குறை சவாலை எதிர்­கொண்டு ­வ­ருவதாக உண­வகச் சங்­கத்­தின் பேச்­சா­ளர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!