தடுப்பூசி எதிர்ப்பு அமைப்பு பிரமுகர், மருத்துவர் கைது

தடுப்பூசி எதிர்ப்பு அமைப்பு பிரமுகர், மருத்துவர் கைது

3 mins read
0e3569f8-ee74-4d47-9459-ecbdc2495c24
பொது நேரடி தொலைபேசிகளில் தொல்லை கொடுக்கும்படி தனது குழு உறுப்பினர்களை ஊக்கு வித்ததாகக் கூறப்படுவதை யொட்டி ஹீலிங் தி டிவைடு அமைப்பை ஏற்படுத்திய ஐரிஸ் கோ விசாரிக்கப்பட்டு வருகிறார். படம்: ஐரிஸ் கோ/ஃபேஸ்புக்வான் மெடிக்கல் கிளினிக் மருத்துவர் ஜிப்சன் சியா, ஏஆர்டி பரிசோதனையில் தொற்று இருந்ததாகக் கூறும் போலியான முடிவையும் தாக்கல் செய்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. படங்கள்: ஃபேஸ்புக் -
multi-img1 of 2

போலி தடுப்பூசி விவரங்களைத் தாக்கல் செய்ததாகக் கூறப்படுவதையொட்டி நடவடிக்கை

'ஹீலிங் த டிவைடு' என்ற தடுப்­பூசிக்கு எதி­ரான அமைப்பை ஏற்­படுத்­திய திரு­வாட்டி ஐரிஸ் கோ கைதாகி இருக்­கி­றார். அவ­ரோடு ஒரு மருத்­து­வ­ரும் உத­வி­யா­ள­ரும் கைதா­யி­னர்.

தடுப்­பூசி சான்­றி­தழ்­களில் சட்­ட­வி­ரோத மாற்­றங்களைச் செய்து அவற்றைச் சுகா­தார அமைச்­சி­டம் தாக்­கல் செய்­ய­வும் ஏமாற்றவும் சதித்­திட்­டம் போட்டதாகக் கூறப்­படு­வ­தன் தொடர்­பில் அதி­கா­ரி­கள் அவர்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கத் தெரி­ய­வந்துள்­ள­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

தாங்­கள் 40 மற்­றும் 33 வய­துள்ள இரண்டு ஆட­வர்­க­ளை­யும் 46 வய­துள்ள மாது ஒரு­வரை­யும் கைது செய்து இருப்­ப­தாக காவல்­துறை அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது. அந்­தச் சதி­யில் சம்­பந்­தப்­பட்டு இருப்­ப­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் இதர எட்டு பேர் விசா­ரிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் காவல்துறை தெரி­வித்­தது.

கைதாகி இருக்­கும் மருத்­து­வரும் அவ­ரின் உதவியாள­ரும் தனிப்­பட்­ட­வர்­கள் சார்­பில் போலி­யான ஆவ­ணங்­க­ளைத் தாக்­கல் செய்து அதன் மூலம் சுகா­தார அமைச்சை ஏமாற்ற சதித்­திட்­டம் போட்டு இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது என்­றும் அது முதல்­கட்ட விசா­ரணை மூலம் தெரியவந்­துள்­ள­தா­க­வும் காவல்துறை தெரி­வித்­தது.

கைதான மூவர் மீதும் நீதி­மன்­றத்­தில் குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

அவர்­களில் ஒரு­வ­ரான திரு­வாட்டி கோ விசா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றார். மருத்­து­வ­ரும் அவ­ரின் உதவியாள­ரும் மேல் விசா­ர­ணைக்­காக விசா­ர­ணைக் காவ­லில் வைக்­கப்­பட்டு உள்­ள­னர்.

இதனிடையே, பிடோக்­கில் செயல்­படும் 'வான் மெடிக்­கல் கிளி­னிக்' என்ற மருந்­த­கத்­தைச் சேர்ந்த ஒரு மருத்­து­வரை தான் விசாரித்து வருவதாக சுகா­தார அமைச்சு தெரிவித்தது.

கொவிட்-19 தடுப்­பூசி ஆவ­ணங்­களில் இடம்­பெற்ற சட்ட விரோ­த­மான திருத்­தங்­கள் தொடர்­பில் அவர் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றார். அந்த மருத்­து­வ­ரு­டன் தொடர்­பு­டைய நான்கு மருந்­தகங்­க­ளுக்­குத் தற்­கா­லி­கத் தடை விதிக்­கப்­பட்டது.

நிகழ்ச்­சிக்கு முன்­ன­தாக நடத்­தப்­படும் ஏஆர்டி பரி­சோ­த­னையை, தடுப்­பூ­சிக்கு எதி­ரான 'ஹீலிங் த டிவைன்' என்ற அமைப்பை ஏற்­படுத்­திய திரு­வாட்டி ஐரிஸ் கோவுடன் சேர்ந்து, தொலை­வில் இருந்­த­படி நடத்­தித்­தர அந்த மருந்­தகம் முன்­வந்­த­­தா­கக் கூறப்­படு­கிறது. அது பற்­றி­யும் அமைச்சு விசா­ரித்து வரு­கிறது.

சென்ற ஆண்டு டிசம்­ப­ரில் தனக்கு ஒரு தக­வல் கிடைத்­ததை அடுத்து அந்த மருந்­த­கத்தைத் தான் கவ­னித்து வரு­வ­தாக அமைச்சு ஞாயிற்­றுக்­கி­ழமை தெரி­வித்­தது.

தனிப்­பட்­ட­வர்­கள் சுய­மாக ஏஆர்டி பரி­சோ­தனை செய்­து­கொள்­வ­தைக் காட்­டும் காணொளி­களை அல்­லது படங்­க­ளைத் தன்னி­டம் அனுப்­பி­வைக்க அந்த மருந்­த­கம் அனு­ம­தித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அந்த மருந்­த­கம் அவற்றை அனுப்­பி­யோ­ருக்­குத் தொற்று இல்லை என்று பரி­சோ­தனை முடிவைத் தெரி­யப்­ப­டுத்­தும்.

தொற்­று­நோய் (ஏஆர்டி பரி­சோ­த­னை­யா­ளர்­கள்) விதி­மு­றை­கள் 2021ன்படி, நிகழ்ச்­சிக்கு முந்­திய பரி­சோ­த­னையை உரிய நேரத்­தில், பதிவு பெற்ற மருத்­து­வர் அல்­லது தகுதி உள்ள சுய பரிசோதனை மேற்­பார்­வை­யா­ளர் முன்­னி­லை­யில்­தான் நடத்த வேண்­டும்.

சம்­பந்­தப்­பட்ட மருந்­த­கத்­தைச் சேர்ந்த மருத்­து­வ­ரான ஜிப்­சன் சியா, 33, தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத தனிப்­பட்­ட­வர்­க­ளுக்­காக தடுப்­பூசி ஆவ­ணங்­களில் போலி­யான தக­வல்­களை இடம்­பெ­றச் செய்து இருக்கிறார் என்றும் கூறப்­ப­டு­கிறது.

தடுப்­பூசி போட்­டுக்கொள்­ளாத நிலை­யில் இருந்­த­வர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடப்­பட்டுவிட்­ட­தா­கக் காட்­டும் வகை­யில் போலி­யான தக­வல்­களைத் தேசிய நோய்த்­தடுப்­பாற்­றல் பதி­வ­கத்­தி­டம் தாக்­கல் செய்து அதன் மூலம் அந்த மருத்­து­வர் இதைச் செய்­தி­ருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கிறது.

ஏஆர்டி பரி­சோ­தனை முடிவு களை­யும் நோயா­ளி­கள் பற்­றிய இதர தக­வல்­க­ளை­யும் பதி­வேற்று ­வ­தற்­காக 'நோயாளி இடர்நிலை களஞ்­சி­யம்' என்ற தேசிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் தளத்தை மருத்­து­வர்­கள் பயன்­படுத்­துகிறார்கள்.

தொற்று இருந்­த­தா­கக் கூறும் போலி­யான ஏஆர்டி பரி­சோ­தனை முடிவு ஒன்றை அந்த மருத்­து­வர் அத்தளத்திற்கு அனுப்பி இருக்­கி­றார் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

அமைச்சு வெள்­ளிக்­கி­ழமை காவல்­து­றை­யி­டம் புகார் செய்­தது. மருத்­து­வ­ரை­யும் தாமஸ் சுவா என்ற அவ­ரின் 40 வயது உதவியாள­ரை­யும் காவல்­துறை கைது ெசய்­தது. அவர்­கள் மீது குற்­றம் சுமத்­தப்­பட்டு உள்­ளது.