விமான கண்காட்சி: குறைவான நிறுவனங்களே பங்கெடுக்கும்

விமான கண்காட்சி: குறைவான நிறுவனங்களே பங்கெடுக்கும்

2 mins read
12e2df64-7728-4ea7-b432-05c192ba1df3
-

சிங்­கப்­பூர் விமான கண்­காட்சி பிப்­ர­வ­ரி­யில் நடக்­கும். இருந்­தா­லும் அதில் கலந்­து­கொள்­ளும் நிறுவனங்­கள் குறை­வா­கவே இருக்­கும்.

முந்­திய கண்­காட்­சி­யு­டன் ஒப்­பி­டு­கை­யில் இப்­போது ஏறத்­தாழ மூன்­றில் ஒரு பங்கு நிறு­வ­னங்­கள் மட்­டுமே ஆர்­வம் காட்டி இருப்­ப­தாகத் தெரி­ய­வந்­துள்­ளது.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களே இதற்­கான கார­ணம்.

வழி­வ­ழி­யாக நடந்து வரும் விமா­னப் போக்­கு­ரத்து உச்­ச­நிலை சந்­திப்­பும் ரத்­தாகி இருக்­கிறது.

சிங்­கப்­பூர் விமான கண்­காட்சி பிப்­ர­வரி 15 முதல் பிப்­ர­வரி 18 வரை சாங்கி கண்­காட்சி நிலை­யத்­தில் நடக்­கும்.

பொது­மக்­கள் கலந்­து­கொள்ள இய­லாது. இது­வ­ரை­யில் இந்த ஆண்டு கண்­காட்­சி­யில் 321 நிறு­வனங்­கள் மட்­டுமே தாங்­கள் கலந்து­கொள்­வதை உறு­திப்­ப­டுத்தி இருப்­ப­தாக பட்­டி­யல் மூலம் தெரி­ய­வருகிறது. இந்­தக் கண்­காட்­சிக்கு எக்ஸ்­பீ­ரியா என்ற நிறு­வ­னம் ஏற்­பாடு செய்­கிறது.

கண்­காட்­சி­யை­யொட்டி நடை­பெ­றும் சிங்­கப்­பூர் விமான கண்­காட்சி விமா­னப் போக்­கு­வ­ரத்து தலை­மைத்­துவ உச்­ச­நிலை மாநாடு என்ற சந்­திப்­புக்கு போக்கு­வ­ரத்து அமைச்சு இணைந்து முன்பு ஏற்­பாடு செய்­தது.

அந்­தச் சந்­திப்பை பின்­னொரு தேதி­யில் நடத்த திட்­ட­மி­டு­வ­தாக அமைச்சு கூறி­யது என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்துள்­ளது.

சிங்­கப்­பூ­ரி­லும் இதர நாடு­க­ளி­லும் கடைப்­பி­டிக்­கப்­படும் எல்லை கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக முக்­கி­ய­மான வாடிக்­கை­யா­ளர்­களும் உயர்­நிலை நிர்­வா­கி­களும் சிங்­கப்­பூ­ருக்கு வரு­வதை ஒத்தி வைப்­பார்­கள் என்று தக­வல் வட்­டா­ரங்­கள் தெரி­வித்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்­டது.

விமான கண்­காட்­சி­யின்­போது இதர பல கட்­டுப்­பா­டு­கள் இருக்­கும் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­துள்­ளது.

கொவிட்-19 தொற்று தலை­காட்­டிய தொடக்க காலத்­தில் அதா­வது, கடந்த 2020ல் நடந்த கண்­காட்­சி­யில் கடை­சி­யில் திடீ­ரென ஏறத்­தாழ 70 நிறு­வ­னங்­கள் தாங்­கள் கலந்­து­கொள்­ள­வில்லை என்று அறி­வித்­து­விட்­டன.

அப்­போது ஏறத்­தாழ 930 நிறு­வனங்­கள் பங்­கெ­டுத்­தன.