ட்ரீம் குரூசஸ் உல்லாசப் பயணக் கப்பல் முன்பதிவு தற்காலிகமாக இரு வார காலம் நிறுத்தம்

ட்ரீம் குரூசஸ் உல்லாசப் பயணக் கப்பல் முன்பதிவு தற்காலிகமாக இரு வார காலம் நிறுத்தம்

2 mins read
a920b49c-3b43-4caf-bf14-68d24b65bd08
-

'ட்ரீம் குரூசஸ்' என்ற உல்­லா­சப் பய­ணக் கப்­பல் நிறு­வ­னம் தொடக்­க­மாக இரண்டு வார காலத்­துக்குப் புதிய கப்­பல் பயண முன்­ப­தி­வு­களைத் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைத்து உள்­ளது.

அந்த நிறு­வ­னத்­தின் தாய் நிறு­வ­ன­மான 'ஜென்­டிங் ஹாங்காங்' நிறு­வ­னம் இதனை நேற்று அறி­வித்­தது.

ஜென்­டிங் ஹாங்காங் நிறு­வ­னம் தன்னுடைய கடனை அடைப்­ப­தற்குப் போதிய பணத்­தைப் பெற முடி­யா­மல் போய்­விட்­டது. அதை­ய­டுத்து அந்த நிறு­வனத்தைக் கலைத்துவிடு­வ­தற்­கான விண்ணப்­பம் சென்ற புதன்­கி­ழமை தாக்­க­லா­னது. இத்­த­கைய நிலை­யில், முன்­ப­திவு தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­பட்டுள்­ளது.

முன்­ப­திவு நிறுத்தம் இம்­மா­தம் 21ஆம் தேதி தொடங்­கி­யது. பிப்­ர­வரி 4ஆம் தேதி வரை அது நீடிக்­கும் என்று ஜென்­டிங் ஹாங்காங் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

இந்த நட­வ­டிக்கை, ட்ரீம் குரூசஸ் விருந்­தி­னர்­க­ளின் நலன்­க­ளைப் பாது­காப்­பதற்­காக இடம்­பெ­று­கிறது என்று நிறு­வனம் குறிப்­பிட்டு உள்­ளது.

நிறு­வ­னத்தைக் கலைத்­து­வி­டு­வ­தற்­கான விண்­ணப்­பம் தாக்­க­லா­னதை அடுத்து அதன் தொழில் நில­வ­ரங்­க­ளைப் பற்றி கூட்டுத் தற்­கா­லிக கலைப்­பா­ளர்­கள் பல­வற்றையும் ஆராய்ந்து வரு­கி­றார்­கள்.

இத­னி­டையே, நேற்று ட்ரீம் குரூசஸ் இணை­யத்தளத்­திற்­குச் சென்­ற­போது, அதில் உல்­லா­சப் பய­ணக் கப்­பல் பற்­றிய விளம்­ப­ரங்­களை நேற்­றும் காண முடிந்­தது. ஆனா­லும் முன்­ப­தி­வுக்கு முயன்­ற­போது பதில் இல்லை.

கொவிட்-19 தொற்று சூழ­லில் சிங்­கப்­பூ­ரில் மகிழ்­உலா சேவை­களை நடத்த இரண்டு உல்­லா­சக் கப்­பல் நிறு­வனங்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது.

அவற்­றில் ட்ரீம் குரூசஸ் நிறு­வ­னத்­தின் 'வேல்டு ட்ரீம்' என்ற கப்­பல் ஒன்று. ராயல் கரீ­பி­யன் நிறு­வ­னத்­தின் 'குவாண்­டம் ஆஃப் த சீஸ்' என்­பது மற்­றொரு கப்­ப­லா­கும்.

ஜென்­டிங் ஹாங்காங் நிறு­வ­னம் கலைப்பு விண்­ணப்­பத்­தைத் தாக்­கல் செய்து இருந்­தா­லும்­கூட சிங்­கப்­பூ­ரில் தன் செயல்­முறை­கள் தொட­ரும் என்று ட்ரீம் குரூசஸ் தெரி­வித்து இருந்­தது.

அதற்கு மூன்று நாள் கழித்து முன்­பதி­வு­கள் ரத்­தாகி உள்­ளன.

ஜென்­டிங் ஹாங்காங் நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மாக 'ஸ்டார் குரூசஸ்', 'கிறிஸ்டல் குரூசஸ்' என்ற இதர இரு உல்­லா­சப் பயண நிறு­வ­னங்­களும் இருக்­கின்­றன.