காவல்துறையில் இரண்டு புதிய ஆளில்லா வானூர்திகள்

காவல்துறையில் இரண்டு புதிய ஆளில்லா வானூர்திகள்

1 mins read
4ac2c351-dbb8-463f-bbad-7db87687c8cd
புதிய வானூர்திகளில் வெப்ப உணர்வுச் சாதனங்கள், படக் கருவிகள் இருக்கின்றன. கூட்டத்தினரைக் கண்காணிக்க இவை அதிகாரிகளுக்கு உதவும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

காவல்­து­றை­யின் ஆளில்லா வானூர்தி பிரி­வில் புதி­தாக இரண்டு வானூர்­தி­கள் சேவை­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்டு உள்ளன.

அந்­தப் புதிய வானூர்­தி­கள் கூட்­டத்தை நிர்­வ­கிக்­க­வும் தேடி மீட்பு நட­வ­டிக்­கை­க­ளி­லும் பயன்­படுத்­தப்­படும். அவை இம்­மா­தம் 19ஆம் தேதி அறிமுகப்படுத்தப் பட்டன.

அந்த நிகழ்ச்­சி­யில் பேசிய ஆளில்லா வானூர்தி பிரி­வின் செயல்­முறை தள­பத்­திய அதி­கா­ரி­யான காவல்­துறை துணை சூப்­பி­ரின்­டென்டண்ட் சும் டுக் மெங், நான்கு வகை நட­வ­டிக்­கை­களில் முக்­கி­ய­மாக காவல்­துறை வானூர்­தி­கள் பயன்­ப­டுத்­தப்படு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

கண்­கா­ணிப்பு, அம­லாக்­கம், தேடி மீட்பு, காவல்­துறை அதி­கா­ரி­க­ளின் பணி ஈடு­பாடு ஆகி­யவை அந்த நான்கு நட­வ­டிக்­கை­கள் என்று அவர் குறிப்பிட்டார்.