இளம் தம்­ப­தி­ய­ரின் உயி­ரூட்­டும் கலை­வண்­ணம்

இளம் தம்­ப­தி­ய­ரின் உயி­ரூட்­டும் கலை­வண்­ணம்

5 mins read
ae7e16ac-0247-42f9-bbd2-109bd35cd68b
'பாடம் செய்­யப்­பட்ட' தங்­க­ளின் படைப்­பு­க­ளு­டன் ஜீவன் ஜோதி (இடம்), அவ­ரின் மனைவி விவி­யன் தாம். படங்­கள்: திமத்தி டேவிட் -

கி. ஜனார்த்­த­னன்

ஒரு கட்­டத்­தில் பய­ணி­க­ளின் உயி­ரைக் காக்­கும் விமா­னி­யாக, வானில் வலம்­வந்­த­வர் ஜீவன் ஜோதி. இன்று உயி­ரில்லா உடல்­

க­ளுக்கு உயி­ரூட்­டக்­கூ­டிய ஒரு வித்­தி­யா­ச­மான தொழி­லில் அவர் இருக்­கி­றார். உயி­ரற்ற விலங்­கு­

க­ளின் உடல்­களை, தத்­ரூ­பம் குறை­யா­மல் கலைப்­பொ­ருள்­க­ளாக மாற்­றும் 'டாக்­சி­டர்மி' (taxidermy) பணி­யில் 31 வயது ஜீவன் உள்­ளார்.

மனைவி திரு­மதி விவி­யன் தாம் ஈடு­பட்டு வரும் இந்த 'பாடம் செய்­தல்' தொழி­லுக்கு உற்ற துணை­யாக இருக்­கி­றார் ஜீவன்.

'பாடம் செய்­தல்' என்­றால்...

இறந்த தங்­க­ளது செல்­லப்­பி­ரா­ணி­க­ளின் உடல்­களை அழி­யா­மல் பாது­காத்­துத் தங்­க­ளு­டனே வைத்­தி­ருக்­க­வேண்­டும் என விரும்­பும் சிலர், சைனா­ட­வுன் வட்­டா­ரத்­தி­லுள்ள இந்­தத் தம்­ப­தி­ய­ரின் 'பிளாக் குரோ டாக்­சி­டர்மி அண்ட் ஆர்ட்' என்ற கடையை நாடு­கி­றார்­கள். பூனை, நாய், கிளி, எலி, முயல், ஹேம்ஸ்­டர் உள்­ளிட்ட விலங்­கு­க­ளின் தோலைப் பக்­கு­வ­மாக அகற்றி, கம்­பி­யால் அல்­லது வேறு உலோ­கத்­தால் செய்­யப்­பட்ட அவ்­வி­லங்­கு­க­ளின் மாதிரி வடி­வங்­க­ளின் மீது விவி­யன் ஒட்­டு­வார்.

இதன்­வழி, அசல் விலங்­கின் தோற்­றத்­தை­யும் முழுத் தோலை­யும் கொண்­டுள்ள ஒரு பொம்மை உரு­வாக்­கப்­ப­டு­கிறது. செல்­லப்­பி­ரா­ணி­கள் மட்­டு­மின்றி விலங்­கு­களை ஆராய்ச்சி செய்ய விரும்­பு­வோ­ரும் இத்­தம்­ப­தி­யின் சேவையை நாடி வரு­கின்­ற­னர். வண்­ணத்­துப்­பூச்சி, தும்பி, தவளை, வௌவால் என இயற்கை ஆர்­வ­லர்­கள் கொண்­டு

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

­வ­ரும் உயி­ரி­னங்­க­ளின் பட்­டி­யல் நீண்­டு­கொண்டே போகிறது.

ஒவ்­வொன்­றுக்­கும் செல­வா­கும் நேரம், அதன் உருவ அள­வைப் பொறுத்­தி­ருக்­கும் என்­றும் அதைத் தயா­ரிக்க, ஒரு வாரம் முதல் இரண்டு மாதம் வரை ஆக­லாம் என்­றும் விவி­யன் கூறி­னார்.

இவ்­வாறு உடல்­கள் பதப்­ப­டுத்­தப்­பட்­ட­தும் அவை கண்­ணா­டிப் பேழை அல்­லது சட்­டம் ஒன்­றில் வைக்­கப்­பட்டு கலைப்­பொ­ரு­ளாக விற்­கப்­ப­டு­கின்­றன.

சவால் விடுத்த படைப்­பு­கள்...

தாங்­கள் இது­வரை செய்­த­வற்­றி­லேயே பாம்­பின் முது­கெ­லும்­பின் பாகங்­களை ஒட்டி மீண்­டும் அதை முழு­மை­யாக்­கும் பணி­தான் மிகச் சவா­லாக இருந்­த­தாக தம்­ப­தி­யர் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

"பாம்­புக்கு முது­கெ­லும்பு இருப்­பதே பல­ருக்­கும் தெரி­வ­தில்லை. வளைந்து நெளிந்து போகும் அதன் உட­லுக்­கு­ரிய முது­கெ­லும்பு மிக­வும் நுணுக்­க­மா­னது," என்று கூறி­னார் விவி­யன்.

மலே­சி­யா­வில் இவ்­வாறு 'பாடம் செய்த' ஒரு குதி­ரையே தாங்­கள் இது­வரை செய்­தி­ருக்­கும் ஆகப் பெரிய படைப்பு என்று கூறி­னர்.

பிறர் கண்­ணுக்கு...

இத்­த­கைய கலைப்­பொ­ருள்­களை சிலர் ஆச்­ச­ரி­யத்­து­டன் ரசித்­தா­லும் ஒரு சிலர் அச்­சத்­தில் தள்­ளிப்­போ­வ­தும் உண்டு. பார்ப்­ப­தற்கு திகி­லூட்­டு­கிறது என்­றது ஒரு கூட்­டம், இது தவறு என மற்­றொரு கூட்­டம் கூறி­ய­தாக தம்­ப­தி­யர் தெரி­விக்­கின்­ற­னர்.

"ஜீவன் தொடர்ந்து எனக்­குப் பக்­க­ப­ல­மாக இருந்து வரு­கி­றார். நான் செய்­த­தைக் கண்டு அஞ்­ச­வும் இல்லை, இதை நிறுத்­தச் சொல்­ல­வும் இல்லை. மாறாக, என் தொழி­லைப் பற்றி மேலும் அறிந்­து­கொள்ள இவர் காட்­டும் ஆர்­வம் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கிறது," என்று விவி­யன் கூறி­னார்.

மனைவி ஈடு­பட்­டி­ருக்­கும் இத்­தொ­ழிலை, தாம் அறி­வி­யல் கண்­ணோட்­டத்­து­டன் காண்­ப­தால் அது பயங்­க­ர­மா­கவோ தவ­றா­கவோ தமக்­குத் தோன்­ற­வில்லை என்­றார் ஜீவன்.

தங்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­படும் ஒவ்­வொரு விலங்­கின் மூலம் தாங்­கள் பல­வற்­றைக் கற்­றுக்­கொள்­வ­தாக ஜீவன் குறிப்­பிட்­டார்.

"பாடம் செய்­யும் கலையை என் மனை­வி­யி­டம் ஓர­ளவு அறிந்­தி­ருக்­கி­றேன். இந்­தக் கடையை நிர்­வ­கித்து இதன் வர்த்­த­கத் தேவை­களை தெரிந்­து­கொள்ள இப்­பு­ரிந்­து­ணர்வு உத­வு­கிறது," என்று அவர் கூறி­னார்.

தம்­ப­தி­ய­ரின் பய­ணம்...

ஆறு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் இரு­வ­ருக்­கும் பழக்­கம் ஏற்­பட்­டது. அப்­போது மலே­சி­யா­வின் சர­வாக் மாநி­லத்­தி­லுள்ள 'யூனி­வர்­சிட்டி மலே­சியா' பல்­க­லைக்­க­ழ­கத்­தில் விலங்­கி­யல் துறை தொடர்­பான பட்­டப்­ப­டிப்பை விவி­யன் மேற்­கொண்­டி­ருந்­தார்.

"தொடக்­கத்­தில் நான் விலங்கு மருத்­து­வர் ஆக ஆசைப்­பட்­டேன். ஆனால் அதற்­கான இடம் கிடைக்­க­வில்லை," என்று மலே­சி­யா­வின் கூச்­சிங் நக­ரில் வளர்ந்த விவி­யன் தெரி­வித்­தார்.

இருந்­த­போ­தும் இள­நி­லைப் பட்­டப்­ப­டிப்­பின்­போது விலங்கு வகை­

க­ளின் பாகங்­க­ளைப் பற்றி தாம் கற்­றுக்­கொண்­ட­தாக விவி­யன் தெரி­வித்­தார்.

நோயி­யல் துறை சார்ந்த முது­நி­லைப் பட்­டப்­ப­டிப்பை அவர் மேற்­கொண்­ட­போது, உயி­ரற்ற உடல்­

க­ளை­யும் அவற்­றின் பாகங்­க­ளை­யும் எவ்­வாறு தீர ஆராய்­வது என்­ப­தைக் கற்­றுக்­கொண்­டார்.

வர்த்­தக நிறு­வ­னம் ஒன்­றில் முழு­நேர வேலை புரி­யும் ஜீவன், வர்த்­த­கத்தை நடத்­து­வ­தி­லும் தமது மனை­விக்­குத் தேவைப்­படும் வளங்­க­ளைத் திரட்­டு­வ­தி­லும் கவ­னம் செலுத்தி வரு­கி­றார்.

"சிங்­கப்­பூ­ரில் இந்­தச் சேவை­யைக் காண்­பது அரிது. இருப்­பி­னும் எங்­கள் சேவைக்­கான கட்­ட­ணத்தை நாங்­கள் கட்­டுப்­ப­டி­யா­கும் வித­மாக வைத்­தி­ருக்­கி­றோம்," என்­றார் ஜீவன். இச்­சே­வைக்கு உரிய அனு­ம­தி­யைப் பெறு­வ­தற்­காக இந்­தத் தம்­ப­தி­யர், பல அர­சாங்க அமைப்­பு­களை அணு­கி­யுள்­ள­னர்.

கோரிக்­கை­கள் பல­வி­தம்...

தங்­க­ளுக்கு வந்­துள்ள விநோ­த­மான கோரிக்­கை­க­ளைப் பற்றி கேட்­ட­போது, "அறுவை சிகிச்­சை­யின் மூலம் அகற்­றப்­பட்ட மனித உடல் பாகங்­க­ளைப் பாது­காக்­கும்­படி சில நோயா­ளி­க­ளி­ட­மி­ருந்து அழைப்­பு­கள் வந்­துள்­ளன. கலைக்­கப்­பட்ட கருவை வேறு சிலர் பாது­காக்க எண்ணி எங்­களை அணு­கி­ய­துண்டு. நாங்­கள் அவர்­க­ளுக்­காக அனு­தா­பம்­தான் பட­மு­டி­யும். இந்த வேண்­டு­கோள்­களை ஏற்­கும் நிலை­யில் நாங்­கள் இல்லை," என்­றார் விவி­யன்.

பயி­ல­ரங்­கு­வழி விழிப்­பு­ணர்வு...

பயி­ல­ரங்­கு­க­ளின் வழி 'பாடம் செய்­யும்' கலை­யைப் கற்­றுத்­த­ரு­வ­தில் இத்­தம்­ப­தி­யர் ஆர்­வம் காட்டி வரு­கின்­ற­னர். தம்­மு­டைய மனை­வி­யி­டம் தாம் கற்­றுக்­கொண்­டது போலவே தயக்­கத்தை விடுத்து திறந்த மன­து­டன் மற்­ற­வர்­களும் தங்­க­ளி­டம் வரு­மாறு ஜீவன் கேட்­டுக்­கொள்­கி­றார்.

"பூச்­சி­க­ளைக் கண்டு எட்­டிப் பாயும் சிறார்­கள், இந்த அறி­வி­யல் கலந்த கலை­யின் மூலம் தைரி­யத்­து­டன் அதே பூச்­சி­க­ளைக் கலைப்­பொ­ருள்­க­ளாக மாற்­று­கி­றார்­கள்," என்று பெரு­மி­தத்­து­டன் கூறி­னார் ஜீவன்.

விலங்­கு­நல நிபு­ணர் அறி­வு­றுத்து...

சாலை­க­ளி­லும் பொது இடங்­க­ளி­லும் சில சம­யம் வன­வி­லங்­கு­க­ளின் இறந்த உடல்­களை நாம் கண்­டி­ருப்­போம். அவற்றை உடனே 'பாடம் செய்­வ­தில்' அவ­ச­ரம் வேண்­டாம் என்று 'ஏக்­கர்ஸ்' எனப்­படும் விலங்கு சார் ஆராய்ச்சி மற்­றும் கல்­விச் சங்­கத்­தின் இணைத் தலைமை நிர்­வாகி கலை­வா­ணன் பால­கி­ருஷ்­ணன், 35, அறி­வு­றுத்தி உள்­ளார். அதற்­குப் பதி­லாக முத­லில் தங்­க­ளின் சந்­தே­கங்­களை, தேசிய பூங்­காக் கழக அதி­காரி

களி­டம் கேட்­டுத் தெளி­வு­பெ­று­வது நல்­லது என்று அவர் தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார்.

"கடல் ஆமை­கள் போன்ற உயி­ரி­னங்­க­ளைப் பாடம் செய்து வைத்­தி­ருப்­ப­தற்கு உரி­மம் தேவை. உரி­மம் இன்றி வைத்­தி­ருப்­பது சட்­டப்­படி குற்­ற­மா­கும்," என்­றார் அவர்.

"விலங்­கு­க­ளின் இறந்த உடல்­க­ளைக் கலைப்­பொ­ரு­ளாக்­கும் இப்­பணி அர்த்­த­முள்­ளது. மக்­கள் இயற்­கை­யின் பன்­மு­கத்­தன்­மையை இதன் மூலம் ரசிக்­க­லாம், கற்­றுக்­கொள்­ள­லாம். ஆனால் பொது இடங்­களில் இறந்து கிடக்­கும் விலங்­கு­க­ளைப் பாடம் செய்­வ­தற்கு­முன் அதி­கா­ரி­கள் ஆலோ­ச­னை­யைப் பெற மற­வா­தீர்," என்று திரு கலை­வா­ணன் கேட்­டுக்­கொண்­டார்.

மனோ­தத்­துவ நிபு­ணர் கருத்து...

செல்­லப்­பி­ரா­ணி­கள் மனி­த­னின் மன­ந­ல­னுக்கு பங்­காற்ற வல்­லவை. அத­னால் அவை இறக்­கும்­போது உரி­மை­யா­ள­ருக்­குத் துய­ரம் ஏற்­ப­டவே செய்­யும் என்று மனோ­தத்­துவ நிபு­ணர் நர­சிம்­மன்

திவா­சி­க­மணி, 37, கூறி­னார்.

ஆனால், இத்­துன்­பத்­தைச் சிலர் புரிந்­து­கொள்­வ­தில்லை. செல்­லப்­பி­ரா­ணியை இழந்­தோர், தங்­க­ளின் வலியை வெளிப்­ப­டுத்த இது­போன்ற 'பாடம் செய்­தல்' முறை­யைத் தேர்ந்­தெ­டுக்­கி­றார்­கள்.

"தங்­க­ளது செல்­லப் பிரா­ணி­யின் உடலை இவ்­வாறு பாது­காப்­பதை ஒரு­வித மரி­யா­தைச் செய­லாக பிறர் புரிந்­து­கொண்­டால் இக்­க­லையை ஏள­னப்­ப­டுத்­து­வது முறை­யல்ல என்று உணர்­வர்," என்­றார் அவர்.