'5 - 11 வயது வரை குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசி போடலாம்'

'5 - 11 வயது வரை குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசி போடலாம்'

2 mins read
a9b47d34-1fb5-4b50-8b7c-99f4e0aa0e53
-

ஐந்து முதல் 11 வயது வரை­யி­லான குழந்­தை­க­ளுக்கு முன்­ப­திவு தேவை­யில்லை. பெற்­றோ­ரு­டன் வந்து எப்­போது வேண்­டு­மா­னா­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­லாம்.

இந்­தப் புதிய ஏற்­பாடு இன்று முதல் அம­லுக்கு வரு­கிறது.

இதற்கு முன்பு உடன்­பி­றந்­தோர் மட்­டுமே முன்­ப­தி­வின்றி திங்­கள் முதல் வியா­ழன் வரை தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

புதிய ஏற்­பாடு, திங்­கள் முதல் வியா­ழன் வரை மட்­டுமே என்று கல்வி அமைச்­சும் பாலர் பருவ மேம்­பாட்டு அமைப்­பும் நேற்று வெளி­யிட்ட கூட்டு அறிக்கை தெரி­வித்­தன. வெள்­ளிக்­கி­ழ­மை­யில் இருந்து ஞாயிறு வரை­யில் முன்­ப­தி­வு­கள் அதி­க­மாக இருப்­ப­தால் குழந்தை களுக்­கான தடுப்­பூசி நிலை­யங்­களில் குழந்­தை­கள் உட­ன­டி­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முடி­யாத சூழ்­நிலை உள்­ளது என்று அறிக்கை விளக்­கி­யது.

தற்­போது தங்­க­ளது ஐந்து முதல் 11 வயது வரை­யி­லான குழந்­தை­க­ளின் தடுப்­பூ­சிக்­குப் பதிந்­து­கொள்ள வேண்­டிய பெற்­றோர் மற்­றும் காப்­பா­ளர்­கள் இனி திங்­கள் முதல் வியா­ழன் வரை முன்­ப­தி­வின்றி உடனே நிலை­யத்­துக்­குச் சென்று தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­லாம் என்று இரு அமைப்­பு­களும் தெரி­வித்­துள்­ளன.

வெள்ளி முதல் ஞாயிறு வரை­யி­லான நாள்­களில் தடுப்­பூசி போட விரும்­பும் குழந்­தை­கள் வழக்­கம்­போல முன்­ப­திவு செய்ய வேண்­டும்.

புதிய ஏற்­பாட்­டின்­கீழ் உட­ன­டி­யாக தங்­க­ளு­டைய பிள்­ளை­க­ளுக்­குத் தடுப்­பூசி போட விரும்­பும் பெற்­றோ­ரும் காப்­பா­ளர்­களும் மாலை 7.00 மணிக்கு முன்பே நிலை­யத்­துக்கு வர வேண்­டும்.

யூசோப் இஷாக் உயர்­நி­லைப் பள்ளி தடுப்­பூசி நிலை­யத்­தில் செவ்­வாய் கிழ­மை­க­ளி­லி­ருந்து வியா­ழன் வரை­யில் தடுப்­பூசி போட்­டுக் கொள்­வ­தாக இருந்­தால் மாலை 5.00 மணிக்கு முன்பே அங்கு வர வேண்­டும்.

உடனே தடுப்­பூசி போட விரும்பு வோர் முன்­ப­திவு செய்­தி­ருந்­தால் அதனை ரத்து செய்ய வேண்­டும் என்று அறிக்கை நினை­வூட்­டி­யது.

தடுப்­பூசி போட வரும்­போது குழந்­தை­யின் அடை­யாள ஆவ­ணங்­களை பெற்­றோ­ரும் காப்­பா­ள­ரும் உடன் கொண்டு வரு­வது அவ­சி­யம். பெற்­றோர் கையெ­ழுத் திட்ட ஒப்­பு­தல் கடி­தத்­தை­யும் கொண்டு வர வேண்­டும்.

சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை நில­வ­ரப்­படி ஐந்து முதல் 11 வயது வரை­யி­லான 160,000 குழந்­தை­கள் முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுள்­ள­னர். 13,000க்கும் மேற்­பட்ட குழந்­தை­கள் இரண்­டா­வது தடுப்­பூ­சி­யை­யும் போட்­டுள்­ள­னர்.

உடன்­பி­றந்ே­தா­ரு­டன் முன்­ப­தி­வின்றி தடுப்­பூசி போட்­டுக் கொள்­ளும் ஏற்­பாட்­டின் மூலம் 13,000 குழந்­தை­கள் பலன் அடைந்து உள்­ள­னர்.