தெமாசெக் அறநிறுவனத்தின் இலவச முகக்கவச விநியோகம் ஞாயிறு முடிவடைந்தது. அந்த இயக்கத்தில் 3.1 மில்லியன் முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு விளக்கம் அளித்த தெமாசெக் அற நிறு வனத்தின் பேச்ச்சாளர் ஒருவர், அண்மைய சுற்றில் சற்றுக் குறைவாக முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடைசியாக நடைபெற்ற இயக்கத்தில் 4.1 மில்லியன் பேர் மறு படியும் பயன்படுத்தக்கூடிய முகக் கவசங்களைப் பெற்றுக்கொண்டனர்.
தெமாசெக் நிறுவனத்தின் 6வது இலவச முகக்கவச விநியோகம் இம்மாதம் 10ஆம் தேதி தொடங்கியது.
தீவு முழுவதும் அமைக்கப் பட்ட தானியங்கி இயந்திரங்கள் மூலம் இரு அளவுகளில் முகக் கவசங்கள் விநியோகிக்கப்பட்டன.

