3,000 தொண்டூழியர்களையும் சமூகத் துறை பங்காளிகளையும் இணைக்கும் புதிய தொண்டூழியக் கட்டமைப்பு

3,000 தொண்டூழியர்களையும் சமூகத் துறை பங்காளிகளையும் இணைக்கும் புதிய தொண்டூழியக் கட்டமைப்பு

1 mins read
efb2d971-1b2a-46f2-bbb1-32d1aa4a9124
-

புதிய எம்­எஸ்­எ­ஃப்­கேர் கட்­ட­மைப்பு மூலம் 3,000க்கும் மேற்­பட்ட தொண்­டூ­ழி­யர்­களும் சமூ­கத் துறை பங்­கா­ளி­களும் ஒரு குடை­யின்கீழ் கொண்­டு­வ­ரப்­ப­டு­வர்.

இப்­பு­திய கட்­ட­மைப்பு நேற்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

குடும்­பத்தை மைய­மா­கக் கொண்ட சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் திட்­டங்­களை ஒருங்­கி­ணைக்­கும் தள­மாக புதிய கட்­ட­மைப்பு விளங்­கும்.

அத்­து­டன், தொண்­டூ­ழி­யர்­களை இணைக்­கும் தள­மா­க­வும் கட்­ட­மைப்பு செயல்­படும்.

இதன்­மூ­லம் தொண்­டூ­ழி­யர்­கள் தங்­கள் அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்து கொள்­வதுடன் ஆலோ­ச­னை­யும் பெற­லாம்.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் தொண்­டூ­ழி­யர், பங்­காளி விரு­து­கள் மெய்­நி­கர் நிகழ்ச்சி நேற்று நடை­பெற்­றது.

சமூ­கத்­துக்­குச் சேவை­யாற்­றிய ஏறத்­தாழ 400 தொண்­டூ­ழி­யர்­கள், சமூ­கத் துறை நிபு­ணர்­கள் கௌர­விக்­கப்­பட்­ட­னர்.

இந்த நிகழ்ச்­சி­யின்­போது புதிய கட்­ட­மைப்பு அறி­மு­கப்­ப­டுத்­தப்

பட்­டது.

இந்த மெய்­நி­கர் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு பேசிய சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி, சமூ­கத்­துக்­குப் பங்­க­ளித்த தொண்­டூ­ழி­யர்­க­ளுக்­குத் தமது நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொண்­டார்.

"வலு­வான, மீள்­தி­றன்­மிக்க குடும்­பங்­களை உரு­வாக்­க­வும் உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்கு ஆத­ரவு வழங்­க­வும் நாங்­கள் மேற்­கொள்­ளும் முயற்­சி­களில் தொண்­டூ­ழி­யர்­க­ளின் பங்கு மிக­வும் முக்­கி­ய­மா­னது.

தொண்­டூ­ழி­யர்­களில் பெரும்­

பா­லா­னோர் நல்­லுள்­ளம் படைத்த தனி­ந­பர்­கள். அவர்­கள் முன்­க­ளப் பணி­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்," என்று அமைச்­சர் மச­கோஸ்

புக­ழா­ரம் சூட்­டி­னார்.

உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்­குத் தேவை­யான புதிய திட்­டங்­கள், தீர்­வு­கள் ஆகி­ய­வற்­றுக்­கான அடித்­

த­ளத்தை புதிய எம்­எஸ்­எ­ஃப்­கேர் கட்­ட­மைப்பு அமைக்­கும் என்­றார் அவர். தொண்­டூ­ழி­யத்­தில் ஆர்­வம் கொண்­டோர் அது­தொ­டர்­பான வாய்ப்­பு­க­ளைப் பற்றி அறிந்­து­கொள்ள msf.gov.sg/volunteer எனும் இணை­ய­வா­சல் தொடங்­கி­வைக்­கப்­பட்­டுள்­ளது.