எரிபொருள் விலையில் ஆக அண்மைய மாற்றம்

எரிபொருள் விலையில் ஆக அண்மைய மாற்றம்

2 mins read
628796a7-fbb3-4913-8637-4b1b1395162b
-

கேல்­டெக்ஸ் நிறு­வ­னம் அதன் எரி­பொ­ருள் விலை­யைக் குறைத்­துள்­ளது.

ஆனால் சினோ­பெக் அதன் எரி­பொ­ருள் விலை­யை உயர்த்தி உள்ளது.

எரி­பொ­ருள் விலை­ தொடர்­பான ஆக அண்­மைய மாற்­றங்­களை சிங்­கப்­பூர் பய­னீட்­டா­ளர் சங்­கம் கண்­கா­ணித்து நேற்று வெளி­யிட்­டது.

எரி­பொ­ருள் விலை­யை இணை­யம் மூலம் ஒப்­பிட்­டுக் காட்­டும் சிங்­கப்­பூர் பய­னீட்­டா­ளர் சங்­கத்­தில் இணை­ய­வா­ச­லான 'பியூ­வல் காக்கி'யை பொறுத்­த­வரை, கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யைக் காட்­டி­லும் கேல்­டெக்ஸ் பெட்­ரோல் நிலை­யங்­களில் விற்­கப்­படும் எரி­பொ­ருள்­க­ளின் விலை இரண்டு காசு குறைந்­துள்­ளது.

கேல்­டெக்ஸ் பெட்­ரோல் நிலை­யங்­களில் 92 ரக பெட்­ரோ­லின் விலை லிட்­ட­ருக்கு $2.65. 95 ரக பெட்­ரோ­லின் விலை $2.69.

இவை தள்­ளு­ப­டிக்கு முன்­பான விலை. கேல்­டெக்­ஸின் உயர் ரக பெட்­ரோ­லின் விலை லிட்­ட­ருக்கு $3.32. டீச­லின் விலை லிட்­ட­ருக்கு $2.23.

சீனா­வைச் சேர்ந்த நிறு­வ­ன­மான சினோ­பெக் அதன் 95 ரக பெட்­ரோ­லின் விலையை ஒரு காசு குறைத்து லிட்­ட­ருக்கு $2.68ஆக விற்­கிறது.

ஆனால் 98 ரக பெட்­ரோ­லின் விலையை இரண்டு காசு உயர்த்­தி­யுள்­ளது. சினோ­பெக்­கின் 98 ரக பெட்­ரோல் விலை லிட்­ட­ருக்கு $3.15.

அதன் உயர் ரக பெட்­ரோ­லின் விலை லிட்­ட­ருக்கு $3.28.

கடந்த வாரம் பெரும்­பா­லான எரி­பொ­ருள் விலை­ இரண்­டி

­லி­ருந்து ஏழு காசு வரை உயர்ந்­தது. ஷெல் நிறு­வ­னம் மட்­டுமே அதன் எரி­பொ­ருள் விலை­களை ஒரு காசு குறைத்­தது.

ஆக அண்­மைய மாற்­றங்­க­ளின் விளை­வாக மற்ற நிறு­வ­னங்­க­ளை­விட ஆக குறை­வான விலை­யில் 95 ரக பெட்­ரோலை சினோ­பெக் விற்­கிறது.

தள்­ளு­ப­டிக்­குப் பிறகு சினோ­பெக்­கின் 95 ரக பெட்­ரோ­லின் விலை லிட்­ட­ருக்கு $2.10. சிங்­கப்­பூ­ரில் மூன்று சினோ­பெக் பெட்­ரோல் நிலை­யங்­கள் மட்டுமே

உள்­ளன.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை யிலிருந்து பல நாடு­கள் மீண்டு வர முயற்­சி­கள் எடுப்­ப­தால் எரி­பொ­ரு­ளுக்­கான தேவை அதி­க­ரித்­துள்­ளது. இத­னால் 2020ஆம் ஆண்டு நடுப்­ப­கு­தி­யி­லி­ருந்து எரி­பொ­ருள் விலை­ படிப்­ப­டி­யாக அதி­க­ரித்து வரு­கிறது.

முன்­பை­விட வாடிக்­கை­யா­ளர்­கள் மத்­தி­யில் மிக­வும் பிர­ப­ல­மான 95 ரக பெட்­ரோ­லின் விலை லிட்­ட­ருக்கு 50 காசு ஏற்­றம் கண்­டுள்­ளது.