இதுவரையில்லா அளவில் கடைவீடுகள் விற்பனை $1.9 பில்லியனை எட்டியது

இதுவரையில்லா அளவில் கடைவீடுகள் விற்பனை $1.9 பில்லியனை எட்டியது

1 mins read
19b593ee-f810-4de9-b89f-ae9091cbe37c
கிளப் ஸ்திரீட்டில் உள்ள இரண்டு கடைவீடுகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் $25.5 மில்லியனுக்கு விற்கப்பட்டன.படம்: பிஸ்னஸ் டைம்ஸ் -

இதுவரையில்­லாத அள­வில் சிங்­கப்­பூ­ரில் கடை­வீ­டு­கள் விற்­பனை கடந்த ஆண்டு $1.9 பில்­லி­யனை எட்­டி­யது.

2019ஆம் ஆண்டு, 2020ஆம் ஆண்டு ஆகி­ய­வற்­றின் பரி­வர்த்­த­னை­க­ளைச் சேர்த்­தா­லும் கடந்த ஆண்­டின் விற்­ப­னைக்கு அது ஈடா­காது.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யின்­போது நிலை­யான வரு­மா­னம் தரக்­கூ­டிய சொத்­து­கள் மீதான ஆர்­வம் அதி­க­ரித்­த­தாக சொத்து நிறு­வ­ன­மான நைட் ஃபிரேங்க் சிங்­கப்­பூர் கூறி­யது.

அண்­மை­யில் அறி­விக்­கப்­பட்ட சொத்து விலை தணிக்­கும் நட­

வ­டிக்­கை­க­ளின் விளைவாக கடை­வீ­டு­க­ளின் விற்பனை சூடு­பி­டிக்­கக்­கூ­டும் என்று சொத்­துச் சந்தை நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

வர்த்­த­கங்­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்­டுள்ள கடை­வீ­டு­களை வாங்கு­வோ­ரும் விற்­ப­வர்­களும் கூடு­தல் முத்­திரை வரி செலுத்த தேவை­யில்லை என்­பதை அவர்­கள் சுட்­டி­னர்.

மேலும் வர்த்­தக நிமித்­த­மாக கடை­வீ­டு­களை வாங்க வெளி­நாட்­ட­வ­ருக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

கடை­வீ­டு­கள் விற்­பனை இவ்­வாண்டு $2 பில்­லி­யனை எட்­டக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­

ப­டு­வ­தாக நைட் ஃபிரேங்க்

சிங்­கப்­பூ­ரின் முத­லீட்­டுச் சந்­தை­கள் பிரி­வின் நிர்­வாக இயக்­கு­நர் திரு­வாட்டி மேரி சாய் தெரி­வித்­தார்.