செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
17ab78eb-8c87-4170-a2be-df205b637c29
-

தந்தையைக் கொன்ற மகனுக்கு ஐந்து ஆண்டு தடுப்புக் காவல் தண்டனை

ஈராண்டுகளுக்கு முன் தனக்கு 14 வயதாக இருந்தபோது, இணைய விளையாட்டுகளில் ஈடுபடுவதைத் தனது தந்தை தொடர்ந்து எதிர்த்து வந்ததால், அவரைக் கொல்ல பல மாதங்களாகத் திட்டமிட்டார் அந்த இளையர். 2020ஆம் ஆண்டு டிசம்பரில் சலவைக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளை தான் வீசி எறிந்துவிட்டார் என்று அந்தத் தந்தை தவறாகக் குற்றஞ்சாட்டியபோது, மிகுந்த கோபம் கொண்ட அந்த இளையர், லோயோங் கொண்டோமினிய வீட்டில் ஒரு கத்தியைக் கொண்டு 49 வயது தந்தையின் கழுத்தில் பலமுறை குத்தியதால் அவர் இறந்தார்.

முன்னதாக கொலைக் குற்றம் சாட்டப்பட்ட அந்த

இளையருக்கு இப்போது 16 வயதாகிறது. அவர் நேற்று நீதி மன்றத்தில் தோன்றியபோது, கொலைக் குற்றம், நோக்க மில்லா மரணத்தை விளைவித்த குற்றமாக மாற்றி அமைக் கப்பட்டது. புதிய குற்றச்சாட்டை அந்த இளையர் ஏற்றுக் கொண்டார். சிறார் மற்றும் இளம் நபர்கள் சட்டத்தின்படி அந்த இளையருக்கு நேற்று ஐந்து ஆண்டு தடுப்புக் காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின்கீழ் தண்டனை பெற்ற முதலாவது நபர் அந்த இளையர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளையருக்கு ஐந்து முதல் ஏழு ஆண்டு தடுப்புக் காவல் விதிக்கப்பட வேண்டும் என்று அரசுத் தரப்பு கோரியது.

தற்காப்புத் தரப்போ தமது கட்சிக்காரருக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டு தடுப்புக் காவல் கோரியது. கைது செய்யப் பட்டதிலிருந்து சிங்கப்பூர் சிறுவர்கள் இல்லத்தில் விசார ணைக் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த இளையர், தொடர்ந்து அங்கேயே இருப்பார் என்றும் இவ்வாண்டு 'ஜிசிஇ' சாதாரணநிலைத் தேர்வுக்குப் படித்துக்கொண்டிருக் கிறார் என்றும் கூறப்பட்டது. சிறார் மற்றும் இளம் நபர்கள் சட்டத்தின்படி அந்த இளையர், பெற்றோர், அவர் தம்பி ஆகியோரது பெயர்களை வெளியிட முடியாது.

போதைப் பொருள் குற்றங்களின் தொடர்பில் 24 வயது பெண் கைது

ஒரு பொட்டலத்தில் ஏழு கிலோ கிராம் கஞ்சா மற்றும் அது தொடர்பான போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற செயலை குடிநுழைவு, சோதனைச் சாவடி (ஐசிஏ) அதிகாரிகள் முறியடித்தார்கள். அந்தப் போதைப் பொருள் குற்றங்களில் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் 24 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்மாதம் 20ஆம் தேதியன்று, அழகுப் பொருட்கள் அடங்கிய பொட்டலத்தை ஸ்கேன் செய்தபோது அதில் இருந்த பொருட்கள் ஐசிஏ அதிகாரிகளுக்கு சந்தேகத்தை எழுப்பியதால், அது கூடுதல் சோதனைக்கு உட்படுத்தப் பட்டது. சோதனையில் அந்தப் பொட்டலத்தில் உள்ள பொருட்களில் கஞ்சா அல்லது கஞ்சா சாறுகள் அடங்கிய மிட்டாய்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. பின்னர் அது குறித்து மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவிடம் (சிஎன்பி) தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அதேநாளில் சிஎன்பி அதிகாரிகள் அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் நடத்தப்பட்ட சோதனையில், சிங்கப்பூரர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 24 எல்எஸ்டி போதை முத்திரைகள், கஞ்சா சாறு அடங்கிய இரு மின்-சிகரெட்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இது குறித்த விசாரணை தொடர்கிறது.