மது குடித்துவிட்டு வாகனம் செலுத்திய குற்றத்துக்காக மூத்த அரசாங்க அதிகாரிக்கு இரண்டு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கட்டட, கட்டுமான ஆணையத்தில் திட்டமிடுதல் பிரிவில் இயக்குநரான கமரோன் இங் ஹுவை என், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, மற்ற வாகனமோட்டிகளை பற்றிய சிந்தனை இல்லாமல் வாகனம் செலுத்தியது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம், ஜாலான் பெமிம்பின் வழியே இங் சென்று கொண்டிருந்தபோது, அவருடைய வாகனம் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மற்றொரு வாகனம் மீது மோதியது.
இங்கிடம் மேற்கொள்ளப்பட்ட சுவாசப் பரிசோதனையில் தென்பட்ட மது அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது தெரியவந்தது.
இங்கின் தண்டனைக் காலம் பிப்ரவரி நான்காம் தேதி தொடங்கும்.
அதோடு, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அனைத்து வகை வாகன உரிமங்களை வைத்திருக்கவும், பெற்றுக்கொள்ளவும் இங்க்குத் தடை விதிக்கப்பட்டது.
38 வயதான இங் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலித்து வருவதாக கட்டட, கட்டுமான ஆணையம் ஸ்டரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தது.

