சிறுமிகளிடமிருந்து பாலியல் சேவை பெற முயன்ற 47 வயது அமெரிக்கர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
18 வயதுக்குக் குறைந்தவருடன் பாலியல் சேவை பெற முயன்றது, சிறார் பாலியல் துன்புறுத்தல் படங்களும், ஆபாசக் காணொளிகளும் வைத்திருந்தது ஆகியவை குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்த ஜேசன் ஸ்காட் ஹெரின் வெளிநாட்டு தொலைபேசி எண்களுக்குக் குறுந்தகவல் அனுப்பி சிறுவர்களுடன் பாலியல் உறவு பெறமுயன்றதாகக் தெரிவிக்கப்பட்டது.
பாலியல் சேவைகளுக்காக சிறுமிகளுக்கு நான்கு மில்லியன் ரூப்பியா ($375) கொடுக்குமாறு முதல் குறுந்தகவல் அனுப்பியவருக்கு ஹெரின் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது முறை, வேறோரு வெளிநாட்டு எண்ணுக்குக் குறுந்தகவல் அனுப்பி தமக்குப் பாலியல் சேவை அளிக்க ஒரு சிறாரைத் தேடி தருமாறு ஹெரின் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரண்டு சம்பவங்கள் 2019ஆம் ஆண்டு நவம்பரும், 2020ஆம் ஆண்டு பிப்ரவரியும் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அதோடு, அவருடைய வீட்டைச் சோதனையிட்ட போது, சிறார்களைப் பாலியல் துன்புறுத்தல் தரும் 90 புகைப்படங்களும், 31 ஆபாசக் காணொளிகளும் கண்டெக்கப்பட்டன.
ஹெரினின் வழக்கு பிப்ரவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஹெரின் பணிநீக்கம் செய்யப்ட்டிருப்பாகவும், பல்கலைக்கழக வளாகத்திற்கு வரத் தடைசெய்யப்பட்டிருப்பதாகவும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஸ்டரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தது.

