சிங்கப்பூரில் கூடுதல் பொறியாளர்களைப் பணியமர்த்தும் முன்னணி நிறுவனம்

சிங்கப்பூரில் கூடுதல் பொறியாளர்களைப் பணியமர்த்தும் முன்னணி நிறுவனம்

1 mins read
aee5b778-3ce8-4e9d-8cbe-f588f766b752
படம்: ராய்ட்டர்ஸ் -

சமூக ஊடக நிறுவனமான டுவிட்டர் அடுத்த ஆண்டு இறுதிக்குள் சிங்கப்பூரில் உள்ள அதன் ஆசிய-பசிபிக் பொறியியல் மையத்தின் ஆள்பலத்தை இரட்டிப்பாக்க உள்ளது.

ஈராண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட அந்த மையத்தில் தற்போது 50க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், தரவியலாளர்கள், ஆய்வாளர்கள், துறை நிர்வாகிகள் பணிபுரிகின்றனர். இந்த எண்ணிக்கை இரு மடங்காக்கப்பட உள்ளது.

புதிய ஊழியர்கள் சிங்கப்பூரை மையமாகக் கொண்டு உலகளாவிய முயற்சிகளில் ஈடுபடுவார்கள் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் டுவிட்டர் கூறியது.

மற்ற திட்டங்களுடன், பயனாளர்களுக்கான தனிப்பட்ட உள்ளடக்கத்தை வெளியிடுதல், தளத்தின் வேகத்தையும் நம்பகத்தன்மையை மேம்படுத்துவது போன்றவற்றில் இங்குள்ள குழு பணியாற்றும்.

குறிப்புச் சொற்கள்