மியன்மார் நெருக்கடிக்கு அமைதிவழியில் தீர்வுகாண வலியுறுத்து

மியன்மார் நெருக்கடிக்கு அமைதிவழியில் தீர்வுகாண வலியுறுத்து

2 mins read
fd97231d-7d71-4909-9ff0-91f45671aaa9
-

மியன்­மா­ரில் நில­வும் நெருக்­கடி கவ­லை­ய­ளிப்­ப­தாக உள்­ளது என்­றும் அதற்­கும் அமை­தி­யான வழி­யில் தீர்­வு­கா­ணப்­பட வேண்­டும் என்­றும் பிர­த­மர் லீ சியன் லூங்­கும் இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோ­டோ­வும் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.

மியன்­மா­ரில் மோச­மான நிலை நீடிப்­ப­தா­கக் கூறிய பிர­த­மர் லீ, கடந்த ஆண்டு ஏப்­ரல் மாதம் எட்­டப்­பட்ட ஆசி­யா­னின் ஐந்து அம்ச கருத்­தி­ணக்­கத்தை நடை­மு­றைப்­படுத்­து­வ­தில் குறிப்­பி­டத்­தக்க எந்த முன்­னேற்­ற­மும் ஏற்­ப­ட­வில்லை என்­றும் குறிப்­பிட்­டார்.

சென்ற ஆண்டு பிப்­ர­வரி 1ஆம் தேதி மியன்­மா­ரில் ராணு­வம் ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­யது. அத­னை­ அடுத்து, அங்கு கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்ள வன்­மு­றையை உட­ன­டி­யாக நிறுத்த வேண்­டும், மனி­தாபி­மான உதவி கிட்ட வழி­வகை செய்ய வேண்­டும், சம்­பந்­தப்­பட்ட அனைத்­துத் தரப்­பு­க­ளு­ட­னும் ஆக்க­க­ர­மான பேச்­சு­வார்த்தை இடம்­பெற வேண்­டும் உள்­ளிட்ட கோரிக்­கை­களை அந்த ஐந்து அம்சத் திட்­டம் உள்­ள­டக்­கு­கிறது.

அந்த அமை­தித் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தன் முக்­கியத்­து­வத்தை அதி­பர் ஜோக்­கோவி மீண்­டும் வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

"இது ஆசி­யா­னில் உயர்­மட்ட அள­வில் எடுக்­கப்­பட்ட முடிவு. இதனை அனை­வ­ரும் மதிக்க வேண்­டும்," என்­றார் அவர்.

ஆசி­யான் தலை­மை­யும் அதன் சிறப்­புத் தூத­ரும் சம்­பந்­தப்­பட்ட அனைத்­துத் தரப்­பு­க­ளை­யும் அதில் ஈடு­ப­டுத்­து­வது அவ­சி­யம் என்று பிர­த­மர் லீ வலி­யு­றுத்­தி­னார்.

மியன்­மார் மக்­க­ளின் பாது­காப்­பும் நல்­வாழ்­வும் மிக முக்­கி­யம் என்­பதை இரு­நாட்­டுத் தலை­வர்­களும் ஒத்­துக்­கொண்­ட­னர்.

"மியன்­மார் மக்களின் நல­னைக் கருத்­தில்­கொண்டு, அங்கு அமைதி­யான, நீடித்து நிலைக்­கத்­தக்க தீர்வை எட்ட உத­வு­வ­தில் கடப்­பாடு கொண்­டுள்­ளோம்," என்று திரு லீ சொன்­னார்.

அங்கு பாகு­பா­டின்றி மனி­தா­பி­மான உத­வி­களை மேற்­கொள்ள ஊக்­கு­விப்­ப­தாக அதி­பர் ஜோக்­கோவி தெரி­வித்­தார்.