சுற்றுப்பயணிகளின் வருகை பெரும் அளவில் சரிந்தது

சுற்றுப்பயணிகளின் வருகை பெரும் அளவில் சரிந்தது

2 mins read
ac9721c3-2102-4a77-84ba-877e3756633b
-

சிங்­கப்­பூ­ரில் கடந்த ஆண்டு

சுற்­றுப்­ப­ய­ணி­க­ளின் வரு­கை­ இது­வரை இல்­லாத அளவில் குறைந்­தது. 2020ஆம் ஆண்­டைக் காட்­டி­லும் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளின் வருகை கடந்த ஆண்டு 80 விழுக்­காட்­டுக்­கும் மேல் சரிவு கண்­டது.

கடந்த ஆண்டு சிங்­கப்­பூ­ருக்கு 330,000 அனைத்­து­ல­கச் சுற்­றுப்­

ப­ய­ணி­கள் மட்­டுமே வந்­தி­ருந்­த­னர்.

சுற்­றுப்­ப­ய­ணி­கள் செய்த செலவு பாதிக்­கும் மேல் குறைந்து தோரா­ய­மாக $1.9 பில்­லி­ய­னா­கப் பதி­வா­ன­தாக சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம் நேற்று வெளி­யிட்ட ஆரம்­பக்­கட்ட தர­வு­கள் காட்­டு­கின்­றன.

2020ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ருக்கு 2.7 மில்­லி­யன் சுற்­றுப்­

ப­ய­ணி­கள் வந்­த­னர்.

அவர்­கள் மூலம் சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக்கு $4.8 மில்­லி­யன் வரு­மா­னம் கிடைத்­தது.

சுற்­றுப்­ப­ய­ணி­க­ளின் வருகை குறைந்­துள்­ள­போ­தி­லும் நாட்­டின் மீட்­சிக்­கான அறி­கு­றி­கள் நம்­பிக்கை அளிக்­கும் வகை­யில் இருப்­ப­தா­கக் கழ­கம் கூறி­யது.

உதா­ர­ணத்­துக்கு, தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணப் பாதை­யின் அறி­மு­கம் கார­ண­மா­கச் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளின் வருகை படிப்­ப­டி­யாக அதி­க­ரிக்­கிறது.

2020ஆம் ஆண்­டின் கடைசி மூன்று காலாண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் கடந்த ஆண்­டின் கடைசி மூன்று காலாண்­டு­களில் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளின் வருகை 221 விழுக்­காடு ஏற்­றம் கண்­டது.

கடந்த ஆண்­டின் இர­ண்­டாம், மூன்­றாம் காலாண்­டு­களில் சுற்­றுப்­ப­ய­ணி­கள் செய்த செலவு 2020ஆம் ஆண்­டின் அதே காலக்­கட்­டத்­து­டன் ஒப்­பி­டும்­போது 92 விழுக்­காடு அதி­கம்.

கடந்த ஆண்டு சிங்­கப்­பூ­ருக்கு வந்த சுற்­றுப்­ப­ய­ணி­களில் பெரும்­பா­லா­னோர் சீனா, இந்­தியா, இந்­தோ­னீ­சியா ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள்.

சீனா­வி­லி­ருந்து 88,000 சுற்­றுப்­ப­ய­ணி­களும் இந்­தி­யா­வி­லி­ருந்து 54,000 சுற்­றுப்­ப­ய­ணி­களும் இந்­தோ­னீ­சி­யா­வி­லி­ருந்து 33,000 சுற்­றுப்­ப­ய­ணி­களும் சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­னர்.

கடந்த ஆண்டு ஜன­வரி மாதத்­துக்­கும் செப்­டம்­பர் மாதத்­துக்­கும் இடைப்­பட்ட காலக்­கட்­டத்­தில் சிங்­கப்­பூ­ருக்கு சுற்­றுப்­ப­ய­ணி­கள் மூலம் $1.2 பில்­லி­யன் வரு­மா­னம் கிடைத்­தது.

சீனா­வைச் சேர்ந்த சுற்­றுப்­ப­ய­ணி­கள் $432 மில்­லி­ய­னும் இந்­தோ­னீ­சிய சுற்­றுப்­ப­ய­ணி­கள் $127 மில்­லி­ய­னும் இந்­தி­யா­வைச் சேர்ந்த சுற்­றுப்­ப­ய­ணி­கள் $58 மில்­லி­ய­னும் செலவு செய்­த­னர்.

நாட்­டைச் சுற்­றிப் பார்ப்­பது, பொழு­து­போக்கு அம்­சங்­கள், விளை­யாட்டு ஆகி­ய­வற்­றுக்­கான செலவு இதில் சேர்க்­கப்­ப­ட­வில்லை.

"கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு பதிவான சுற்றுப்பயணிகள் எண்ணிக்கையை மீண்டும் எட்ட மேலும் பல நாள்களாகும். இருப்பினும், நமது பயணத்துறை வர்த்தகங்களின் மீள்திறனும் தரமான வேலைகளைப் பாதுகாக்க அவை கொண்டுள்ள கடப்பாடு, வர்த்தகத்தை உருமாற்ற அவை மேற்கொள்ளும் முயற்சிகள், புதிய பொருட்கள், அனுபவங்களில் முதலீடு செய்ய அவற்றுக்கு இருக்கும் துணிவு ஆகியவை ஊக்குவிக்கும் வகையில் உள்ளன," என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் தலைமை நிர்வாகி கீத் டான் கூறினார்.

செய்தியாளர் கூட்டத்தில் நேற்று பேசிய திரு டான், இவ்வாண்டு சிங்கப்பூரின் சுற்றுப்பயணத் துறையின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதைக் கணிப்பது சிரமம் என்று தெரிவித்தார். நிச்சயமற்ற நிலை தொடர்வதாகவும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.