‘சிங்கே 50’: கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்தும் பேருந்துகள்

பேருந்­து­களில் பய­ணம் செய்­யும் பய­ணி­க­ளுக்கு சிங்கே உணர்வை ஏற்­ப­டுத்த சிங்கே மித­வை­கள் போன்று 20 பேருந்­து­கள் அலங்­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இப்­பே­ருந்­து­கள் முந்­தைய ஆண்­டு­களில் பொது­மக்­க­ளைப் பிர­மிக்­க­வைத்த சிங்கே மித­வை­களை நினை­வுப்­ப­டுத்­து­கின்­றன.

பேருந்­து­க­ளின் உட்­பு­றப் பகுதிகள் மிக­வும் அழ­காக அலங்­க­ரிக்­கப்­பட்டு பிர­கா­ச­மா­கக் காட்­சி­ய­ளிக்­கின்­றன. ஆங்­காங்கே வைக்­கப்­பட்­டுள்ள கியூ­ஆர் குறி­யீட்டை வருடி, முந்­தைய சிங்கே ஊர்­வ­லங்­களில் பங்­கெ­டுத்த கலை­ஞர்­கள், தொண்­டூ­ழி­யர்­கள். பார்­வை­யா­ளர்­கள் ஆகி­யோ­ரின் அனு­ப­வங்­க­ளைப் பற்றி பய­ணி­கள் தெரிந்­து­கொள்­ள­லாம்.

சிங்கே மித­வை­கள் போன்று அலங்­க­ரிக்­கப்­பட்­டுள்ள இப்­பே­ருந்து­ கள் லிட்­டில் இந்­தியா, சைனா

ட­வுன், கேலாங் சிராய், குடிமை வட்­டா­ரம் ஆகிய பகுதிகளில் வரும் மார்ச் மாதம் 27ஆம் தேதி வரை போக்­கு­வ­ரத்­துச் சேவையை வழங்­கும். பேருந்­து­க­ளுக்கு அழகு சேர்க்க 14 வடி­வ­மைப்­பு­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. உள்­ளூர் ஓவி­யக் கலை­ஞர் சாம் லோவின் வடி­வ­மைப்­பும் இவற்­றில் அடங்­கும். சிங்கே ஊர்­வ­லத்­தின் 50வது ஆண்டு விழா இவ்­வாண்டு கொண்­டா­டப்­ப­டு­கிறது. இந்­தக் கொண்­டாட்­டத்­தின் ஓர் அம்­ச­மாக இந்த வடி­வ­மைப்பு இடம்­பெ­றும்.

இந்த 'சிங்கே 50' பேருந்­து­களை கலா­சார, சமூக, இளை­யர்துறை அமைச்­ச­ரும் மக்­கள் கழ­கத்­தின் துணைத் தலை­வ­ரு­மான எட்­வின் டோங் நேற்று காலை அறி­மு­கப்­ப­டுத்தி வைத்­தார்.

"சிங்­கப்­பூ­ரில் ஒவ்­வோர் ஆண்­டும் சிங்கே ஊர்­வ­லம் நடை­பெ­று­கிறது. இது நம் வாழ்­வின் ஒரு பகு­தி­யா­கி­விட்­டது. சிங்கே ஊர்­வ­லம் தொடங்கி 50 ஆண்­டு­கள் ஆகி­விட்­டன என்று நினைக்­கும்­போது ஆச்­ச­ரி­ய­மாக உள்­ளது.

"சாதா­ரண ஊர்­வ­ல­மா­கத் தொடங்­கிய இந்த நிகழ்வு, புத்­தாண்­டுக் கொண்­டாட்­டத்­தின் ஒரு முக்­கிய பகு­தி­யா­கி­விட்­டது. சிங்­கப்­பூ­ரின் கலாசாரத்தை இந்த ஊர்­வ­லம் எழி­லுற காட்­டு­கிறது.

"முந்­தைய சிங்கே ஊர்­வ­லங்­

க­ளுக்கு அழகு சேர்த்த மித­வை­களை பலர் பார்த்­தி­ருக்க வாய்ப்­பில்லை. எனவே வெவ்­வேறு பய­ணப் பாதை­களில் செல்­லும் பேருந்­து­கள் அக்­கால சிங்கே மித­வை­கள் போல அலங்­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இத­னால் அவற்றை மேலும் பலர் கண்டு மகிழ முடி­யும். அது­மட்­டு­மல்­லாது அவற்­றில் சுவாரசியமான அனு­ப­வ­மும் அவர்­க­ளுக்­குக் கிடைக்­கும். இத­னால் கொண்­டாட்ட உணர்­வைப் பய­ணி­க­ளால் உணர முடி­யும்," என்று அமைச்­சர் டோங் தெரி­வித்­தார்.

முன்பு சிங்கே மித­வை­க­ளைக் காண பொது­மக்­கள் சாலை­யோ­ரம் காத்­துக்­கொண்­டி­ருப்­பர். குடி­யி­ருப்­புப் பகு­தி­க­ளுக்கு அரு­கில் உள்ள சாலை­க­ளின் வழி­யாக மித­வை­கள் செல்­லும்­போது அவற்­றைப் பொது­மக்­கள் பார்த்து ரசித்­த­னர். சிங்­கே­யின் 50வது ஆண்டு விழாவை முன்­னிட்டு இதை மீண்­டும் நடப்­புக்­குக் கொண்டு வர நாங்­கள் விரும்­பி­னோம். அதே சம­யம் கொவிட்-19 சூழ­லைக் கருத்­தில் கொண்டு பாது­காப்­பான முறை­யில் கொண்­டாட ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

"பொது­மக்­களை ஒன்­றி­ணை­யச் செய்து நமது மக்­கள், கலா­சா­ரம், மர­பு­டைமை ஆகி­ய­வற்­றைக் கொண்­டா­டு­வதே சிங்கே விழா­வின் இலக்கு. சிங்கே ஊர்­வ­லம் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் தனித்­து­வம் வாய்ந்த பாரம்­ப­ரி­யம். இது தொடர்­வது முக்­கி­யம். கடந்த 50 ஆண்­டு­க­ளாக, தலை­முறை தலை­மு­றை­யாக இந்த ஊர்­வ­லம் நடத்­தப்­பட்டு வரு­கிறது," என்று மக்­கள் கழ­கத்­தின் கலை­கள், கலா­சா­ரப் பிரிவு இயக்­கு­

ந­ரான திரு­வாட்டி டான் சுவீ லெங் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!