சக பள்ளி மாணவரைக் கத்தியால் வெட்டிய இளையருக்கு ஓராண்டு சீர்த்திருத்தப் பயிற்சி விதிக்கப்பட்டுள்ளது.
19 வயதான பழனிதாஸ் ராமதாஸ் தம்முடன் தொழில்நுட்பக் கல்விக்கழகம் காலேஜ் ஈஸ்டில் படித்த மற்றொரு மாணவரைக் கத்தியால் வெட்டினார்.
அந்த மாணவருக்கு இடது தோள்பட்டையிலும், காதிலும் காயங்கள் ஏற்பட்டன.
தம்மை முறைத்துப் பார்த்ததால் பழனிதாஸ் ராமதாஸ் அந்த மாணவரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
பழனிதாஸ் ராமதாஸ் ஆபத்தான முறையில் நடந்துகொண்டதாகவும், வெட்டப்பட்ட இளையர் தப்பிக்க முயன்றபோது, அவரைத் துரத்தியதாகவும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
பாதிக்கப்பட்ட இளையருக்கு இழப்பீடு தொகையாக $135.66 கொடுக்கவும் பழனிதாஸ் ராமதாஸ்க்கு உத்தரவிடப்பட்டது.
ஆள்மாறட்ட மோசடி, உரிமம் இல்லாமல் வாகனம் செலுத்தியது போன்ற மற்ற குற்றச்சாட்டுகளையும் பழனிதாஸ் ராமதாஸ் ஒப்புக்கொண்டார்.

