$67,000 நன்கொடை: சிங்கப்பூர்

$67,000 நன்கொடை: சிங்கப்பூர்

1 mins read
2dc40d1b-dd2d-4cf2-a814-b699bea9ab40
பேரிடரால் சேதமடைந்த கட்டடம். படம்: ராய்ட்டர்ஸ் -

டோங்காவின் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்க சிங்கப்பூர் அரசாங்கம் $67,000 வழங்கும் என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த நன்கொடை சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் டோங்காவுக்கு அனுப்பிவைக்கப்படும்.

உணவு, குடிநீர், தற்காலிக தங்குமிடங்கள் போன்றவற்றுக்கு நன்கொடை பணம் பயன்படுத்தப்படும்.

டோங்காவை தாக்கிய பேரிடரால் பல மாண்டனர். பெரும் சேதமும் ஏற்பட்டது.

அது குறித்து தாம் வருத்தமடைவதாக வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் சொன்னார்.

டோங்கா நாட்டு மக்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 15 அன்று, வலுவான எரிமலை வெடிப்பு டோங்காவை உலுக்கியது. அதனைத் தொடர்ந்து பேரலை அத்தீவை தாக்கியது.