கையில் வைத்திருந்த ஒருமாதக் குழந்தையைத் தவறவிட்ட செவிலித்தாய்

கையில் வைத்திருந்த ஒருமாதக் குழந்தையைத் தவறவிட்ட செவிலித்தாய்

1 mins read
1bdc7810-7e96-4262-993b-d43da98d0eaa
குழந்தையைக் கையில் தூக்கி வைத்திருந்தபடி தரையில் அமர்ந்து இருந்த அந்தச் செவிலித்தாய், தூங்கிவிட்டார். இதனால் குழந்தையை அவர் தவறவிட்டதில், அது விழுந்துவிட்டது. -

ஹவ்காங் வீட்டில் செவிலித்தாய் ஒருவரின் பராமரிப்பின்கீழ் தம்முடைய ஒருமாதக் குழந்தையை ஒப்படைத்துவிட்டு வேலைக்குச் சென்றுவிடுவர் சீ தம்பதி.

குழந்தையின் பாதுகாப்பைக் கண்காணிக்க அத்தம்பதி தங்களுடைய வீட்டில் கண்காணிப்புக் கருவியைப் பொருத்தியிருந்தனர். குழந்தைக்கு விளைவிக்கப்பட்ட கொடுமையை அந்தக் கண்காணிப்புக் கருவியில் பார்த்துதான் அவர்கள் தெரிந்துகொண்டனர். இப்படி அந்தக் குழந்தையைப் பல விதங்களில் துன்புறுத்தினார் அந்த செவிலித்தாய்.

குழந்தையைக் கையில் தூக்கி வைத்திருந்தபடி தரையில் அமர்ந்து இருந்த அந்தச் செவிலித்தாய், தூங்கிவிட்டார். இதனால் குழந்தையை அவர் தவறவிட்டதில், அது விழுந்துவிட்டது. நல்ல வேளையாக, தரையில் மெத்தை போடப்பட்டிருந்ததால், குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பு குறைந்தது.

இந்தச் சம்பவத்தைக் கண்காணிப்புக் கருவியில் பார்த்து அதிர்ச்சியுற்ற சீ தம்பதியர், காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை தொடர்கிறது.