அரசாங்கம், தக்க நேரத்தில் நடவடிக்கை எடுக்கும் முறையிலிருந்து முன்னெச்சரிக்கையாக செயல்படும் போக்கிற்கு மாறும் சாத்தியம் இருப்பதாக நாடாளுமன்றத்தின் பொதுத் துறை கணக்குக் குழுவான பொதுக் கணக்குக் குழு தெரிவித்துள்ளது. மேலும், வீட்டிலிருந்து வேலை செய்வது, அலுவலகத்தில் வேலை பார்ப்பது ஆகிய இரண்டையும் அரசாங்கத் துறை பின்பற்றுவது குறித்தும் அது கவலை தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளின் கருத்துகளுடன் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றன. கொவிட்-19 கிருமியை சகித்துக்கொண்டு வாழும் நாடாக சிங்கப்பூர் உருவெடுத்துவரும் வேளையில் குறைந்தபட்சமாகச் செலவிடப்படும் தொகையை மறுபரிசீலனை செய்வது, நீடித்த நிலைத்தன்மை அம்சத்தைக் கொண்ட மேம்பாட்டுத் திட்டமான சிங்கப்பூர் பசுமைத் திட்டத்திற்கு உகந்த ஆளுமை முறை தேவைப்படுவது போன்றவற்றையும் பொதுக் கணக்குக் குழு ஆராய்ந்தது. உலகளவில் விநியோகச் சங்கிலிக்கு ஏற்பட்ட இடையூறுகள் அரசாங்கம் செய்யும் செலவுக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்பைப் பற்றியும் இக்குழு கவலை தெரிவித்தது.
"விநியோகச் சங்கிலி சார்ந்த கவலைகள் ஒருபுறம் இருக்க, பணவீக்கம் தொடர்பிலான மற்ற அபாயங்களும் குறைகளும் அரசாங்கம் செய்யும் செலவைப் பாதிக்கலாம், அதனால் நிதி சார்ந்த ஆளுமை முறைகளுக்கும் உள்ளமைப்புக் கட்டுப்பாடுகளுக்கும் மாற்றங்கள் தேவைப்படலாம்," என்று கணக்குக் குழு கூறியது.
இதற்குப் பதிலளித்த நிதி அமைச்சு, தேவைப்படும்போது பயன்படுத்தக்கூடிய நிதி வளங்களை ஏற்படுத்திக்கொள்வது உட்பட நான்கு உத்திகளை நடைமுறைப்படுத்தியுள்ளதாகக் கூறியது.
மேலும், அரசாங்கத் துறை வீட்டிலிருந்து வேலை பார்ப்பது, அலுவலகத்தில் வேலை செய்வது ஆகிய இரு நடைமுறைகளையும் அதிகம் பின்பற்றும் வேளையில் ஆளுமை, கட்டுப்பாடுகள் உள்ளிட்ட அம்சங்களின் தொடர்பில் எழக்கூடிய அபாயங்களைப் பற்றியும் கணக்குக் குழு கவலை தெரிவித்தது. இதற்குப் பதிலளித்த பொதுச் சேவைப் பிரிவு, குடிமக்கள், நிறுவனங்கள் இரு தரப்பும் சுமுகமாகச் சேவைகளைப் பயன்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் கூறியது.
மேலும், கருத்துகளை சரியான நேரத்தில் பரிசீலிக்க வழிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் சொன்னது.
இந்த முறையிலேயே வேலை செய்வேன் என்று கோர முடியாது, வேலைத் தேவைகளுக்கு ஏற்றவாறு வேலை முறை அமையும் என்பதைச் சுட்டிய பொதுச் சேவைப் பிரிவு, இதன் தொடர்பில் புதிய வழிமுறைகளை வரையவுள்ளது.
நீண்டகாலம் வீட்டிலிருந்து வேலை செய்வது குறித்து பொதுக் கணக்குக் குழு கவலை

