கட்டுமானத் துறை மீண்டெழக்கூடும்

கட்டுமானத் துறை மீண்டெழக்கூடும்

2 mins read
63ce8c64-9a11-4343-b77e-d3876de49ba2
கட்டுமானத் தளம் ஒன்று. கோப்புப் படம் / ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கட்­டு­மா­னத் துறை­யில் நட­வ­டிக்கை­கள் அதி­க­ரித்த வண்­ணம் இருக்­கின்­றன. அத­னால் இத்­து­றை­யின் செயல்­பாடு கொள்­ளை­நோய்ப் பர­வல் காலத்­திற்கு முன்பு இருந்­த­தைப் போல் மீண்டுவரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கட்­டு­மா­னத் துறை­யில் இவ்­வாண்டு 27 முதல் 32 பில்­லி­யன் வெள்ளி மதிப்­பு­கொண்ட குத்­த­கை­கள் வழங்­கப்­படும் என்று கட்­டட, கட்­டுமான ஆணை­யம் கணித்­துள்­ளது. 2019ஆம் ஆண்­டி­லும் கிட்­டத்­தட்ட இதே மதிப்புகொண்ட கட்டுமானக் குத்தகைகள் வழங்கப்பட்டன.

மேலும், அடுத்த ஆண்­டி­லி­ருந்து 2026க்கு இடைப்­பட்ட காலத்­தில் ஆண்­டு­தோ­றும் கட்­டு­மா­னத் தேவை­க­ளின் மதிப்பு 25லிருந்து 32 பில்­லி­யன் வெள்­ளிக்கு இடைப்­பட்டு இருக்­கும் என்று ஆணை­யம் முன்­னு­ரைத்­தது.

தொடர்ந்து இருந்­து­வ­ரும் கட்டு­மா­னத் தேவை­கள், 2020ஆம் ஆண்டு கொள்­ளை­நோய்ப் பர­வல் தொடங்­கி­ய­தி­லி­ருந்து ஒத்­தி­வைக்­கப்­பட்ட திட்­டங்­கள் ஆகி­யவை கட்­டு­மா­னத் துறையை வளர்ச்­சி­யடை­யச் செய்­வ­தாக தேசிய வளர்ச்சி துணை அமைச்­சர் டான் கியட் ஹாவ் கட்­டட, கட்­டு­மான ஆணை­யத்­தின் மாநாடு ஒன்­றில் கூறி­னார்.

"வெளிநாட்டு ஊழியர்களின் வருகை படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது.

"சென்ற ஆண்டு முடுக்­கி­விடப்­பட்ட எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள், நாட்­டிற்­குள் நுழை­வ­தற்­கான விதி­மு­றை­கள் ஆகி­யவை நடப்­பில் இருந்த கால­கட்­டத்­தில் பதி­வா­ன­ எண்ணிக்கையுடன் ஒப்­பி­டு­கை­யில் தற்­போது மாதந்­தோ­றும் இங்கு வரும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்கை இரண்டு மடங்­கிற்­கும் மேல் அதி­க­ரித்துள்ளது," என்று திரு டான் குறிப்­பிட்­டார்.

எனி­னும், கட்­டு­மா­னத் துறைக்­கான முன்­னு­ரைப்பு நம்­பிக்கை தரும் வகை­யில் அமைந்­தா­லும் அது பாதிப்படையக்கூடிய அபா­யம் இன்­ன­மும் இருப்­ப­தாக கட்­டட, கட்­டு­மா­ன ஆணை­யத்­தின் உத்­தி­பூர்வ திட்­ட­மி­டு­தல், உரு­மாற்­றக் குழு­வின் இயக்­கு­நர் தியோ ஜிங் சியோங் சொன்­னார்.

"நிலை­மை­யைக் கணிக்­க­முடியாது. ஓமிக்­ரான் வகை கொவிட்-19 கிருமி அபா­யம் விளை­விக்­கக்­கூ­டும். இதற்கு ஆளா­னோர் அதி­கம் நோய்­வாய்ப்­ப­டா­விட்­டா­லும் நிறு­வ­னங்­கள் தங்­க­ளின் ஊழி­யர்­களைப் பற்­றிக் கவ­லைப்­ப­டா­மல் இருந்­து­விட்­டால் அவர்­க­ளி­டையே கிரு­மித்­தொற்று சம்­ப­வங்கள் அதி­க­மா­கும்­போது செயல்­பா­டு­கள் முடங்கிப்­போ­கும்," என்று திரு டான் கலந்துகொண்ட மாநாட்டில் பேசிய திரு தியோ எச்­சரித்­தார்.