உற்பத்தி 15.6% அதிகரிப்பு

உற்பத்தி 15.6% அதிகரிப்பு

2 mins read
c6dc2c92-430e-4eca-a46e-70ba2728a82a
-

சிங்­கப்­பூ­ரின் உற்பத்தி திறன் தொடர்ந்து மூன்­றா­வது மாத­மாக கூடி­யுள்­ளது. குறிப்­பாக உயி­ரி­யல் மருத்துவம், போக்­கு­வ­ரத்து, துல்­லி­யப் பொரு­ளி­யல் துறை­களில் பதி­வான வளர்ச்­சி­யால் சென்ற மாதம் உற்­பத்­தி ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் 15.6 விழுக்­காடு அதி­க­ரித்­த­தாக பொரு­ளி­யல் மேம்­பாட்டு வாரி­யம் வெளி­யிட்ட தக­வல்­கள் தெ­ரி­வித்­தன.

புள்ளி விவ­ரங்­கள் மீண்­டும் கணிக்­கப்­பட்ட பிறகு கடந்த நவம்­பர் மாதம் 14.1 விழுக்­காடு வளர்ச்சி பதி­வா­னது. ஒட்­டு­மொத்­த­மாக சென்ற ஆண்டு உற்­பத்­தி 13.2 விழுக்­காடு கூடி­யது.

அடிக்­கடி மாற்­றம் பதி­வா­கக்­கூடிய உயி­ரி­யல் மருத்துவ உற்­பத்­தி­த் துறையைத் தவிர்த்து சென்ற ஆண்டு பதி­வான உற்­பத்­தி வளர்ச்சி விகி­தம் ஐந்து விழுக்­காடு. இது, கடந்த நவம்­பர் மாதம் பதி­வான 11.9 விழுக்­காட்­டைவிடக் குறைவு.

ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் சிங்கப்­பூ­ரின் மின்­னியல் பொருள்­கள் துறை­யின் வளர்ச்சி சென்ற மாதம் 2.9 விழுக்­காடு குறைந்­தது. எனி­னும், சென்ற ஆண்டு முழு­வ­தற்­கும் இத்­து­றை­ 14.5 விழுக்­காடு வளர்ச்சி கண்டது.

உயி­ரி­யல் மருத்துவ உற்­பத்­தி சென்ற மாதம் அதிக அள­வில் 87.7 விழுக்­காடு அதி­க­ரித்­தது. இதே துறை­யில் மருந்து நிறு­வனங்­கள் பிரிவு ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் 162.3 விழு­க்காடு வளர்ச்சி கண்­டது. ஒட்­டு­மொத்­த­மாக உயி­ரி­யல் மருத்துவம் சென்ற ஆண்டு 11.1 விழுக்­காடு வளர்ச்­சி­ய­டைந்­தது.

போக்­கு­வ­ரத்­துப் பொறி­யி­யல் துறை 40.8 விழுக்­காடு வளர்ச்­சி­யடைந்­தது. சென்ற ஆண்டு முழு­வதற்­கும் இத்­துறை 13.2 விழுக்­காடு வளர்ச்சி கண்­டது.

துல்­லி­யப் பொறி­யி­யல் துறை சென்ற மாதம் 16.4 விழுக்­காடு கூடி­யது.

சென்ற ஆண்டு முழு­வதற்­கும் இத்­துறை 18.9 விழுக்­கா­டு வளர்ச்சி கண்­டது.