பிள்ளை வளர்ச்சிக்கு உதவி

பிள்ளை வளர்ச்சிக்கு உதவி

1 mins read
71617d84-c246-428c-b954-d0c07dd65753
-

குழந்தையின் முதல் ஆண்டில் அதன் அசைவுகளும் பேச்சும், குழந்தையின் வளர்ச்சி குறித்த அறிகுறிகளாக இருக்கலாம். ஆனால், இது சில காலத்துக்கு கவனிக்கப்படாமல் போகக்கூடும்.

சரி­யான பருவத்­தில் குழந்தை

புர­ளா­மல் இருப்­பது போன்ற அம்­சங்­கள் பிரச்­சி­னை­க­ளைக் குறிக்­க­லாம். அதே­போல் ஒரு குழந்தை சத்­தத்­திற்கு செவி சாய்க்காமல் இருந்­தால் அதற்கு மொழி­யைப் புரிந்­து­கொள்­வ­தில் குறை­பாடு இருக்­க­லாம்.

வள­ரும்­போது இத்­த­கைய அம்­சங்­க­ளின் தொடர்­பில் பிள்­ளை­களுக்­கு சில தேவை­கள் இருக்­கக்கூடும். அவற்­றைக் கண்­ட­றிய 12.1 மில்­லி­யன் வெள்ளி மதிப்­பு­கொண்ட திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

குழந்­தை­ பிறந்து இரண்­டாம் மாதத்­தி­லி­ருந்தே அதன் வளர்ச்­சிக்­கான தேவை­க­ளைக் கண்­ட­றி­வது இத்­திட்­டத்­தின் இலக்கு.

இத்­திட்­டம் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டதும் இதனால் இரண்டு மாதங்­க­ளுக்­கும் நான்கு வய­துக்­கும் உட்­பட்ட சுமார் 1,800 பிள்ளைகள் பல­ன­டை­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. நான்­காண்­டு­களில் இத்திட்டம் 16 பாலர் பள்­ளி­களில் நடை­முறைப்­ப­டுத்­தப்­படும்.

சம்பந்தப்பட்ட பாலர் பள்­ளி­களை 'பிசி­எஃப்' எனும் மக்­கள் செயல் கட்சி சமூக அற­நி­று­வ­னம் நிர்­வ­கிக்­கிறது.

இந்தப் பாலர் பள்ளிகள் பொங்­கோ­லி­லும் செங்­காங்­கி­லும் அமைந்­துள்­ளன.

'எம்­ஐபி2' எனும் இத்­திட்­டத்­தில் பல்­வேறு நிபு­ணர்­கள் இடம்­பெ­று­வர்.

பிள்ளைகளுக்கும் அவர்­களின் பெற்­றோ­ருக்­கும் இத்திட்டம் ஆதரவளிக்கும்.

'பிசி­எஃப்', கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­மனை, லியென் அற­நி­று­வ­னம் ஆகி­யவை இணைந்து திட்­டத்தை செயல்­ப­டுத்­து­கின்­றன.