சிங்கப்பூரில் அடுத்த மாதம் விமானக் காட்சி நடைபெறவிருப்பதைத் தொடர்ந்து சாங்கி கண்காட்சி நிலையத்திற்கு அருகே உள்ள சாலைகள் சில நாள்கள் பொதுமக்களுக்கு மூடப்படும். விமானக் காட்சி அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை அரங்கேறும்.
பார்வையாளர்களும் பங்கேற்பாளர்களும் டாக்சி அல்லது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துச் சேவைகளில் இந்நிகழ்வுக்குச் செல்லலாம். கிராப், கொஜெக் போன்ற தளங்களின் வாயிலாக தனியார் வாடகை வாகனச் சேவைகளில் போகமுடியாது.
தானா மேரா கோஸ்ட் சாலையில் சைக்கிளோட்டிகளுக்கான தடம் உள்ளிட்டவை அடுத்த மாதம் நான்காம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை தினமும் இரவு எட்டரை மணியிலிருந்து மறுநாள் காலை ஆறு மணி வரை மூடப்படும். 10ஆம் தேதியிலிருந்து 21ஆம் தேதி வரை இவை நாள் முழுவதும் மூடப்பட்டிருக்கும். வாகனங்கள் செல்லும் சில சாலைகளும் மூடப்படும்.
மாற்றங்களால் பாதிக்கப்பட்ட சாலைகள் அடுத்த மாதம் 22ஆம் தேதி இயல்புநிலைக்குத் திரும்பும்.
மேல்விவரங்களை சிங்கப்பூர் விமானக் காட்சி 2022ன் இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.