நீடித்த நிலைத்தன்மையான உணவு முறை

2 mins read
184b2acc-25e6-4dcc-acd5-4381c62132cb
'பிளாக் சோல்ஜர் ஃபிளைஸ்' ஈக்கள் (இடது). பேராசிரியர் நளினி (இரண்டாம் படத்தில் வலது). படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

உணவு உற்­பத்­திக்குத் தேவை­யான ஊட்­டச்­சத்தை 'பிளாக் சோல்­ஜர் ஃபிளைஸ்' எனும் பர­வ­லா­கக் காணப்­படும் ஈக்­க­ளைக் கொண்டு வீணா­கும் உண­வி­லி­ருந்து பெறும் முறையை சில ஆய்­வா­ளர்­கள் கண்டு­பி­டித்து வரு­கின்­ற­னர். சிங்கப்­பூர் போன்ற நகர்ப்­புற சூழ­லில் வீணா­கும் உணவை நிர்வகிப்பது, நீடித்த நிலைத்­தன்மை அம்­சத்­துடன் உணவை உற்­பத்தி செய்­வது ஆகிய இரண்­டை­யும் ஒன்­றி­ணைப்­பது இந்த ஆய்­வா­ளர்­க­ளின் நோக்கம்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக் கழ­கத்­தின் உயி­ரி­யல் அறி­வி­யல் பிரி­வின் துணைப் பேரா­சி­ரி­யர் நளினி புண்­ணி­ய­மூர்த்தி இத்­திட்டத்தை வழி­ந­டத்­து­கி­றார். உணவு வீணா­வ­தைக் குறைப்பதோடு நீடித்த நிலைத்­தன்மை அம்­சத்­து­டன் உணவு உற்­பத்­தியை அதி­க­ரிக்­க­வேண்­டும். இதுவே உண­வுப் பாது­காப்பு தொடர்­பில் சிங்­கப்­பூர் எதிர்­நோக்­கும் இரட்­டிப்பு சவால் என்று பேரா­சிரி­யர் நளினி குறிப்­பிட்­டார்.

'பிளாக் சோல்­ஜர்' ஈக்­கள் இளம் பரு­வத்­தில் புழு வடி­வில் இருக்கும்­போது தங்­க­ளின் உடல் எடை­யில் நான்கு பங்கு அளவு வீணா­கும் உணவை உட்­கொள்­ளக்­கூ­டி­யவை. அதற்­குப் பிறகு அவை உட்­கொண்­டது 'ஃபிராஸ்' எனும் ஒரு வகை பூச்சிக் கழிவாகிறது.

இதை, வேளாண் துறை­யில் வர்த்­தக ரீதி­யா­கப் பொது­வா­கப் பயன்­ப­டுத்­தப்­படும் எருவுக்குப் பதி­லா­கவோ அத­னு­டன் சேர்த்தோ உப­யோ­கிக்­கலாம்.

புரத சத்து, கொழுப்­புச் சத்து ஆகி­ய­வை நிறைந்த அதி­கம் கொண்ட புழு வடி­வில் இருக்­கும் இளம் ஈக்­களை பண்ணை விலங்­குக­ளுக்கு உண­வாகவும் அளிக்­க­லாம்.

சிங்­கப்­பூ­ரில் இயங்­கும் சுவிட்­சர்­லாந்­தின் சூரிக் நக­ரின் 'சிங்­கப்­பூர்-இடி­ஹெச் சென்­டர்' எனப்­படும் தொழில்­நுட்­பக் கழ­கத்­தின் பேரா­சி­ரி­யர் ஸ்டீ­ஃப­ன் கேர்ன்­ஸு­டன் இணைந்து பேரா­சி­ரி­யர் நளினி இத்­திட்­டதை வழி­ந­டத்­து­கிறார். இந்த மூவாண்டுத் திட்டத்திற்கு தேசிய ஆய்வு நிறுவனம் நிதி வழங்குகிறது.