175 நிறுவனங்களுக்கு $1.1 மில்லியன் அபராதம்

175 நிறுவனங்களுக்கு $1.1 மில்லியன் அபராதம்

2 mins read
32a8e4fa-b744-4b20-97b6-2d7abbfdcfab
-

வேலை அனுமதி அட்டை ஊழியர்களின் வசிப்பிட முகவரிகளைப் புதுப்பிக்கத் தவறின

வேலை அனு­மதி அட்டை ஊழி­யர்கள் 960 பேரின் வசிப்­பிட முக­வரி­க­ளைக் குறித்த காலத்­தில் புதுப்­பிக்­கத் தவ­றி­ய­தற்­காக கடந்த ஈராண்­டு­களில் 175 நிறு­வ­னங்­களுக்கு $1.1 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான தொகை அப­ரா­த­மாக விதிக்­கப்­பட்­டது.

தொலை­பேசி அழைப்பு, மின்­னஞ்­சல்­ மூல­மா­கத் திரும்ப திரும்ப நினை­வூட்­டி­யும் அந்­நி­று­வனங்­கள் அதைச் செய்­யத் தவ­றி­ய­தாக மனி­த­வள அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

ஒவ்­வொரு வேலை அனு­மதி அட்டை ஊழி­ய­ருக்­கும் $500 முதல் $2,000 வரை என்ற கணக்­கில் அந்­நி­று­வ­னங்­க­ளுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

மனி­த­வள அமைச்­சின் 'வெளி­நாட்டு ஊழி­யர் முக­வரி சேவை' இணை­யப் பக்­கம் வழி­யாக நிறு­வனங்­கள் தங்­க­ளது வேலை அனு­மதி அட்டை ஊழி­யர்­க­ளின் வசிப்­பிட முக­வ­ரி­க­ளைக் கட்­டா­யம் தெரி­விக்க வேண்­டும். அவர்­கள் வேறு வசிப்­பி­டத்­திற்கு மாறி­னால், ஐந்து நாள்­க­ளுக்­குள் புதிய முக­வ­ரி­யைப் பதி­வேற்­றம் செய்ய வேண்­டும்.

"பொதுச் சுகா­தார அல்­லது தொடர்­பு­க­ளின் தட­ம­றி­தல் போன்ற அவ­சர கார­ணங்­க­ளுக்­காக, வேலை அனு­மதி அட்டை ஊழி­யர்­க­ளைத் தொடர்­பு­கொள்ள ஏது­வாக அவர்­களின் வசிப்­பிட முக­வரி குறித்த துல்­லி­யத் தக­வல்­களைத் தெரிந்து வைத்­து இ­ருக்க வேண்­டி­யது அவ­சி­யம்," என்று மனி­த­வள அமைச்­சின் பேச்­சா­ளர் கூறி­னார்.

அத­னால், தங்­கள் ஊழி­யர்­களு­டன் தொடர்­பைப் பேணு­மா­றும் ஊழி­யர்­கள் தாங்­க­ளாக வேறு வசிப்­பி­டத்­திற்கு மாறி­னால் அது­குறித்துத் தக­வல் தெரி­விக்­கு­மாறு அறி­வுறுத்­த­வும் நிறு­வ­னங்­கள் ஊக்­கு­விக்­கப்­படு­கின்­றன என்­றும் அவர் சொன்­னார்.

அமைச்சின் இணை­யப் பக்­கத்­தில் ஊழி­யர்­க­ளின் முக­வரி­க­ளைப் புதுப்­பிக்­கத் தவ­றும் நிறு­வ­னங்­கள்­மீது அம­லாக்க நட­வடிக்கை எடுக்கப்படும்.

வெளி­நாட்டு ஊழி­யர் வேலை நிய­மன (வேலை அனு­மதி அட்டை) விதி­மு­றை­க­ளுக்கு இணங்கி நடக்­கா­த­வர்­க­ளுக்கு ஒவ்­வொரு குற்­றத்­திற்­கும் $10,000 வரை அப­ரா­தம் அல்­லது 12 மாதங்­கள்­வரை சிறை அல்­லது இவ்­விரு தண்­ட­னை­களும் விதிக்­கப்­ப­ட­லாம்.

அத­னால், வேலை அனு­மதி அட்டை ஊழி­யர்­க­ளைக் கொண்­டுள்ள நிறு­வ­னங்­கள் இந்த நினை­வூட்­ட­லுக்­குச் செவி­ம­டுக்­கு­மாறு அமைச்சு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.