600 குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு $1.2 மில்லியன் ஃபேர்பிரைஸ் பற்றுச்சீட்டுகள்

600 குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு $1.2 மில்லியன் ஃபேர்பிரைஸ் பற்றுச்சீட்டுகள்

2 mins read
fab26f69-0707-4695-a038-7645807591ca
-

உயர்ந்­து­வ­ரும் வாழ்க்­கைச் செல­வினங்­க­ளைச் சமா­ளிக்­கும் வகை­யில், அடுத்த மூன்று ஆண்­டு­களில் 600 குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளுக்கு மொத்­தம் $1.2 மில்­லி­யன் மதிப்­பி­லான பற்­றுச்­சீட்­டு­களை நன்­கொ­டை­யாக வழங்­க பேரங்­காடிக் குழு­ம­மான என்­டி­யுசி ஃபேர்பி­ரைஸ் உறு­தி­ய­ளித்­துள்­ளது.

சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கத்­தின் 'மீல்ஸ் வித் லவ்' திட்­டத்­தின்­கீழ் பயன்­பெற்­று­வ­ரும் குடும்­பங்­க­ளுக்கு இந்­தப் பற்­றுச்­சீட்­டு­கள் வழங்­கப்­படும். குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் குடும்­பங்­களும் ஒற்­றைப் பெற்­றோ­ரைக் கொண்­டுள்ள குடும்­பங்­களும் அவற்­றில் அடங்­கும்.

அக்­கு­டும்­பங்­க­ளுக்கு ஆறு மாதங்­க­ளுக்கு ஒரு­முறை ஃபேர் பி­ரைஸ் பற்­றுச்­சீட்­டு­கள் வழங்­கப்­படும். இந்­தப் பற்­றுச்­சீட்­டுத் திட்­டத்­திற்­கான தொகையை ஃபேர் பி­ரைஸ் அற­நி­று­வ­னம் திரட்­டும்.

உத­வி­பெ­றும் குடும்­பத்­தில் எத்­தனை பேர் உள்­ள­னர் என்ற அடிப்­ப­டை­யில் பற்­றுச்­சீட்டு வழங்­கப்­படும். நால்­வர் உள்ள குடும்­பத்­திற்­குச் சரா­ச­ரி­யாக மாதத்­திற்கு $250 மதிப்­புள்ள பற்­றுச்­சீட்­டு­கள் கிடைக்­கும்.

அக்­கு­டும்­பங்­க­ளின் நிலை குறித்து ஆறு மாதங்­க­ளுக்கு ஒரு­முறை தொண்­டூ­ழி­யர்­கள் மறு­ஆய்­வும் மதிப்­பீ­டு­ம் செய்­வர். அதற்­கேற்ப, நன்­கொ­டை­யாக வழங்­கப்­படும் பற்­றுச்­சீட்­டு­களும் மதிப்­பும் மாற்­றி­ய­மைக்­கப்­படும்.

என்­டி­யு­சி­யைப் பொறுத்­த­மட்­டில், வாழ்க்­கைச் செல­வி­னங்­க­ளைச் சமா­ளிக்க குடும்­பங்­க­ளுக்கு உத­வு­வது எப்­போ­துமே முக்­கி­ய­மா­ன­தாக இருந்து வரு­கிறது என்று ஃபேர்பி­ரைஸ் குழு­மத்­தின் தலைமை நிர்­வாக அதிகாரி சியா கியான் பெங் கூறினார்.

கடந்த 2013ஆம் ஆண்­டில் இருந்து 'மீல்ஸ் வித் லவ்' திட்­டத்­தைச் செஞ்­சி­லு­வைச் சங்­கம் செயல்­ப­டுத்தி வரு­கிறது. இந்த நி­லை­யில், அத்­திட்­டத்­தின் ஆத­ர­வா­ள­ராக ஃபேர்பி­ரைஸ் இணைந்­தி­ருப்­பது இதுவே முதன்­முறை.

செஞ்­சி­லு­வைச் சங்க இணை­யத்­த­ளம் வழி­யா­கப் பொது­மக்­கள் இத்­திட்­டத்­திற்கு நன்­கொடை வழங்­க­லாம். அல்­லது, பற்­றுச்­சீட்டு­களைச் சேக­ரித்து, விநி­யோ­கித்து, அக்­கு­டும்­பங்­க­ளு­டன் நட்பு பாராட்­டும் வகை­யில் திட்­டத்­தின் தொண்­டூ­ழி­ய­ரா­க­வும் இணை­ய­லாம்.

முதற்­கட்­ட­மாக, ஃபேர்பி­ரைஸ் குழு­மத்­தின் 30க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­கள் இத்திட்­டத்­தின் தொண்­டூ­ழி­யர்­க­ளா­க இணைந்துள்ளனர்.