வேளாண் உணவுத் துறையில் 4,700 வேலைகள் உருவாக்கப்படும்

வேளாண் உணவுத் துறையில் 4,700 வேலைகள் உருவாக்கப்படும்

2 mins read
afd4cff7-8a6a-4a2f-951f-eca4f6ad5ba6
-

பரு­வ­நிலை மாற்­றம் போன்ற பிரச்­சி­னை­க­ளால் உல­கம் உணவு விநி­யோ­கத்­தில் சவால்­களை எதி­நோக்கி­வ­ரும் நிலையில், வேளாண் உண­வுப் புத்­தாக்­கம் மூல­மாக சிங்கப்­பூர் தனது உண­வுப் பாது­காப்பை மேம்­ப­டுத்தி வரு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் வேளாண் உணவுச் சூழ­ல­மைப்பு விரைந்த வளர்ச்­சி­யைக் கண்டு வரு­கிறது. மேம்­பட்ட விளைச்­ச­லை­யும் நீடித்து நிலைக்­கத்­தக்க உண­வுத் தீர்­வு­களை­யும் வழங்­கும் தொழில்­நுட்­பங்­க­ளு­டன் கூடிய அதி­க­மான புத்­தாக்க நிறு­வனங்­கள் இங்கு கால்­ப­தித்து வரு­கின்­றன.

கடந்த ஆண்டு புதிய அசை­யாச் சொத்து முத­லீ­டு­களை ஈர்த்த துறை­களில் இத்­து­றை­யும் ஒன்று என சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கம் தனது வரு­டாந்­திர மறு­ஆய்­வில் குறிப்­பிட்­டுள்­ளது.

சிங்­கப்­பூர் சென்ற ஆண்­டில் $11.8 பில்­லி­யன் அசை­யாச் சொத்து முத­லீ­டு­களை ஈர்த்­துள்­ளது.

உயர்­தொ­ழில்­நுட்ப வேளாண்­துறை 2030ஆம் ஆண்­டிற்­குள் ஏறக்­கு­றைய 4,700 வேலை­களை உரு­வாக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரின் வேளாண் உண­வுத் துறை வளர்ச்­சியை முன்­னெ­டுத்­துச் செல்­வோரில், தாவ­ரம் சார்ந்த உணவு உற்­பத்­தி­யா­ள­ரான 'நெக்ஸ்ட் ஜென் ஃபுட்ஸ்' நிறு­வ­ன­மும் ஒன்று. கோழி இறைச்­சிக்கு மாற்­றாக 'டிண்­டல் (TiNDLE)' உண­வுப்­பொ­ருளை 2021 மார்ச்சில் அந்­நி­று­வ­னம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. அந்த 'சைவ கோழிக்கறி' இப்­போது ஆசி­யா­வி­லும் மத்­திய கிழக்கு வட்­டா­ரத்­தி­லும் கிட்­டத்­தட்ட 200 உண­வ­கங்­களில் கிடைக்­கிறது.

இவ்­வாண்டு தொடக்­கத்­தில் 'சைவ கோழிக்கறி' அமெ­ரிக்­கா­விலும் ஆண்­டி­று­திக்­குள் ஐரோப்­பா­வி­லும் அறி­மு­கப்­ப­டுத்த அந்த நிறு­வ­னம் திட்­ட­மிட்­டுள்­ளது.

ஆய்வு, உரு­வாக்­கத்­தி­லும் உற்­பத்­திப்­பொ­ருள் புத்­தாக்­கத்­தி­லும் கவ­னம் செலுத்­தும் வித­மாக, அந்த ­நி­று­வ­னம் இவ்­வாண்­டின் பிற்­ப­குதி­யில் உண­வுத் தொழில்­நுட்­பப் புத்­தாக்க மையத்­து­டன் இணைந்து புதிய ஆய்வு மையத்­தைத் திறக்­க­ இருக்­கிறது.