திறனாளர், தொழில்நுட்ப மேம்பாட்டில் கவனம் செலுத்தும் எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்

திறனாளர், தொழில்நுட்ப மேம்பாட்டில் கவனம் செலுத்தும் எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்

4 mins read
0f870678-ddbb-4b38-b79c-f45dedb78d79
செய்தியாளர் கூட்டத்தில் எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி திரு பேட்ரிக் டேனியல் (இடது), தலைவர் திரு கோ பூன் வான்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட் நிறுவனம் கடந்த சில மாதங்­க­ளாக அதன் திற­னா­ளர், தொழில்­நுட்ப ஆற்­றலை மேம்­ப­டுத்­தும் முயற்­சி­யில் ஈடு­பட்டு வரு­கிறது.

உயர்­தர, நம்­ப­க­மான செய்­தித்­து­றையை வழங்க திறனாளர், தொழில்­நுட்ப மேம்­பாட்­டில் எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட் தொடர்ந்து

கவ­னம் செலுத்­தும் என்று அதன் தலை­வர் திரு கோ பூன் வான் நேற்று தெரி­வித்­தார்.

கடந்த டிசம்­பர் 1ஆம் தேதி­யி­லி­ருந்து சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து பிரிந்து தனி­யா­கச் செயல்­படும் எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட், திற­னா­ளர், தொழில்­நுட்ப மேம்­பாட்­டில் அதி­கம் முத­லீடு செய்ய இருப்­ப­தா­க­ திரு கோ கூறி­னார்.

முதல் சில முத­லீ­டு­க­ளுக்கு ஆத­ரவு வழங்க அர­சாங்­கம் இணங்கி­யி­ருப்­ப­தாக அவர் கூறி­னார்.

அர­சாங்­கம், குல­வ­ழிச் சங்­கங்­கள், சமூக அமைப்­பு­கள் போன்ற மற்ற அமைப்­பு­க­ளி­ட­மி­ருந்து நிதி பெறு­வது குறித்து நடத்­தப்­படும் கலந்­து­ரை­யா­டல்­கள் சுமு­க­மாக நடை­பெ­று­வ­தாக திரு கோ தெரி­வித்­தார். இது­தொ­டர்­பான அறி­விப்பைக் கூடிய விரை­வில் எதிர்­பார்க்­க­லாம் என்­றார் அவர்.

நேற்று நடை­பெற்ற செய்­தி

­யா­ளர் கூட்­டத்­தில் இத்­த­க­வல்­களை திரு கோ வெளி­யிட்­டார்.

அவ­ரு­டன் எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட்­டின் இடைக்­கால தலைமை நிர்­வாக அதி­காரி பேட்­ரிக் டேனி­யல், ஆங்­கில, மலாய், தமிழ்

ஊட­கப் பிரி­வின் முதன்மை ஆசி­ரி­யர் வாரன் ஃபெர்னாண்­டஸ், சீன ஊட­கக் குழு­மத்­தின் முதன்மை ஆசி­ரி­யர் லீ ஹுவே லெங் ஆகி­யோ­ரும் திரு கோவு­டன் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் கலந்­து­கொண்­ட­னர். லாப நோக்­க­மற்ற அமைப்­பான எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட்­டுக்­குத் தலைமை தாங்­கு­கி­றார் முன்­னாள் அமைச்­ச­ரான திரு கோ.

முன்­னாள் எஸ்­பி­எச் நிறு­னத்­தின்­கீழ் திறமை, தொழில்­நுட்ப மேம்­பாட்­டுக்­குப் போது­மான அள­வில் முத­லீடு செய்­யப்­ப­ட­வில்லை என்­றார் அவர்.

இந்த இரு பெரு இடை­

வெ­ளி­களை உட­ன­டி­யா­கச் சரி­செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று திரு கோ கூறி­னார்.

எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட்­டின் செய­லி­கள், இணைத்­த­ளங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வோ­ரின் அனு­ப­வத்தை மேம்­ப­டுத்­தும் நோக்­கில் தொழில்­நுட்­பத்­தில் அதி­கம் முத­லீடு செய்­யப்­படும் என்­பதை அவர் வலி­

யு­றுத்­தி­னார்.

புதிய ஊட­கப் பயிற்­சிக் கழ­கம்

தனது செய்­தி­யா­ளர்­க­ளின் மின்­னி­லக்­கத் திறன்­க­ளை­யும் பல்­லூ­டக ஆற்­ற­லை­யும் மேம்­ப­டுத்த ஊட­கப் பயிற்­சிக் கழ­கம் ஒன்றை அமைக்க எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட் முத­லீடு செய்­யும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஃபுளோ­ரி­டா­வில் உள்ள போய்ன்­டர் பயிற்­சிக் கழ­கம், ஆக்ஸ்­ஃபர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் உள்ள ராய்ட்­டர்ஸ் பயிற்­சிக் கழ­கம் போன்ற அனைத்­து­லக ஊட­கப் பயிற்­சிக் கழ­கங்­க­ளு­டன் எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட்­டின் பயிற்­சிக் கழ­கம் இணைந்து செயல்­படும் என்­றார் எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட்­டின் ஆங்­கி­லம், மலாய், தமிழ் ஊட­கப் பிரி­வின் முதன்மை ஆசி­ரி­யர் வாரன் ஃபெர்னாண்­டஸ்.

அனைத்­து­ல­கப் பயிற்­சிக் கழ­கங்­க­ளு­டன் இணைந்து இங்­குள்ள செய்­தி­யா­ளர்­க­ளுக்­குத் தேவை­யான பயிற்­சித் திட்­டங்­கள், தோழ­மைத் திட்­டங்­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­படும் என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ரில் உள்ள ஒட்­டு­மொத்த ஊட­கத் துறைக்­கும் வட்­டார நாடு­க­ளைச் சேர்ந்த சில

செய்­தி­யா­ளர்­க­ளுக்­கும் தனது பயிற்­சித் திட்­டங்­களை விரி­வு­ப­டுத்­து­வதே எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட்­டின் நீண்­ட­கால இலக்கு என்று திரு ஃபெர்னாண்­டஸ் தெரி­வித்த்­தார்.

புதிய தலைமை நிர்­வாக அதி­காரி

எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட்­டின் புதிய தலைமை நிர்­வாக அதி­காரி தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டு­விட்­ட­தா­க­வும் இன்­னும் இரண்டு வாரங்­க­ளுக்­குள் அது­கு­றித்து அறி­விக்­கப்­படும் என்­றும் திரு கோ தெரி­வித்­தார்.

ஓய்­வு­பெற்ற பிற­கும் புதிய எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட்டை வழி­ந­டத்த தற்­கா­லி­க­மா­கப் பொறுப்­பேற்­றுக்­கொண்ட திரு பேட்­ரிக் டேனியலை அவர் பாராட்­டி­னார்.

"அதில் இருக்­கும் சிர­மம் எனக்கு நன்­றா­கத் தெரி­யும். நானும் ஓய்­வு­பெற்ற பிறகு மீண்­டும் முக்­கிய பொறுப்பை ஏற்­றுள்­ளேன். கார­ண­மா­கத்­தான் நாங்­கள் ஓய்­வு ­பெற்­றோம்," என்­றார் 69 வயது திரு கோ.

சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்­சின் துணை தலைமை நிர்­வாக அதி­காரி பொறுப்­பி­லி­ருந்து 2017ஆம் ஆண்­டில் திரு பேட்­ரிக் டேனி­யல் ஓய்­வு­பெற்­றார்.

தாய்­மொ­ழிக்கு முக்­கி­யத்­து­வம்

இளம் சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே தாய்­மொழி பயன்­பாட்டை மேம்­

ப­டுத்­து­வது எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட்­டின் முக்­கிய இலக்­கு­களில் ஒன்று என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் கலா­சா­ரம், மர­பு­டைமை ஆகி­ய­வற்­றைப் பாது­காக்க விழை­யும் பல்­வேறு சமூக அமைப்பு­ க­ளு­டன் இணைந்து எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட் செயல்­படும் என்று திரு ஃபெர்னாண்­டஸ் கூறி­னார். அத்­து­டன், தனது ஊட­கச் சேவை­கள் பள்­ளி­க­ளுக்­கும் விரி­வு­ப­டுத்­தப்­படும் என்­றார் அவர்.

தாய்­மொழி ஊட­கப் பிரிவை மேம்­ப­டுத்­தும் நோக்­கில் எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட்­டைச் சேர்ந்த தமிழ் முரசு, பெரித்தா ஹரி­யான் ஆகிய நாளி­தழ்­க­ளு­டன் மட்­டு­மின்றி மற்ற அமைப்­பு­கள், சங்­கங்­கள், வட்­டார நாடு­களில் உள்ள மற்ற ஊட­கங்­கள் ஆகி­ய­வற்­று­டன் எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட்­டின் சீன ஊட­கப் பிரிவு செயல்­படும் என்று அதன் முதன்மை ஆசி­ரி­யர் திரு­வாட்டி லீ ஹுவே லெங் கூறி­னார்.

வெளி­நாட்டு வாச­கர்­க­ளை­யும் சென்­ற­டைய எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட் தனது முயற்­சி­க­ளைத் தீவி­ரப்­ப­டுத்­தும் என்­றும் திரு ஃபெர்னாண்­டஸ் பகிர்ந்­து­கொண்­டார்.