'தடுப்பூசியால் இல்லை, இதய நோயால் மரணம் ஏற்பட்டது'

'தடுப்பூசியால் இல்லை, இதய நோயால் மரணம் ஏற்பட்டது'

1 mins read
18b836a4-3e99-41f4-a4c4-9909e6cdad63
-

இம்­மாத தொடக்­கத்­தில் 39 வயது பெண்­ணின் மர­ணத்­துக்கு கொவிட்-19 தடுப்­பூசி கார­ணம் இல்லை என்­றும் இத­ய செய­ல் ­இழப்­பால் அவர் மாண்­ட­தா­க­வும் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழக இதய சிகிச்சை நிலையமும்

சிங்­கப்­பூர் தேசிய இதய சிகிச்சை நிலையமும் தெரி­வித்­துள்­ளன.

திரு­வாட்டி கிறிஸ்­டினா ரோட்ரிகுவெஸ் சியா­வின் இத­ய செய­லி­ழப்­புக்கு கொவிட்-19 தடுப்­பூசி நேர­டிக் கார­ணம் இல்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு ஏப்­ரல் மாதத்­தில் இரண்டு தடுப்­பூ­சி­க­ளை­யும் அவர் போட்­டுக்­கொண்ட பிறகு திரு­வாட்டி சியா­வுக்கு எவ்­வித ஒவ்­வா­மை­யும் ஏற்­ப­ட­வில்லை என்று இரு நிலையங்களும் வெளி­யிட்ட கூட்­ட­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­

பட்­டது.

மர­ணம் குறித்து வதந்­தி­க­ளைப் பரப்ப வேண்­டாம் என்று அறிக்­கை­யின் மூலம் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டது. தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பிறகு திரு­வாட்டி சியா­வுக்கு இத­யப் பிரச்­சினை ஏற்­பட்­ட­தாக அவ­ரைத் திரு­ம­ணம் செய்­து­கொள்ள இருந்த திரு நிப்ரோய்னர் ஜெரமி தமது சமூக வலைத்­த­ளத்­தில்

பதி­விட்­டி­ருந்­தார்.