கொவிட்-19 சேவைத் துறை ஊழியர்களுக்கு நன்றி கூறி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று இஸ்தானாவில் நடைபெற்றது.
நிகழ்வின்போது 'சிங்கப்பூர் ஸ்டேண்ட்ஸ் பை யூ' எனும் காணொளிப் பாடலைக் கேட்டபோது அதிபர் ஹலிமா யாக்கோப் மனம் நெகிழ்ந்து கண்ணீர்
சிந்தினார்.
சிங்கப்பூரில் கொவிட்-19 தலைதூக்கி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதை அவர் சுட்டினார்.
"எதிர்வரும் சவால்களுக்கு
சிங்கப்பூரும் சிங்கப்பூரர்களும் தயாராக இருக்க உங்களது
பங்களிப்பு பாராட்டிற்குரியது," என்று கொவிட்-19 சேவைத் துறை ஊழியர்களுக்கு அதிபர் ஹலிமா நன்றி தெரிவித்தார்.

