மோசடிகளை முறியடிக்க முயற்சி

மோசடிகளை முறியடிக்க முயற்சி

2 mins read
3d107f8d-f396-479e-b481-1c13414bcd34
மோசடிகள் குறித்த விழிப்புணர்வை வளர்க்க பொதுமக்கள், ஊழியர் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள், பணிப்பெண்கள் ஆகியோருக்கு இந்தத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்படும். படம்: நிஞ்சா வேன் -

பொருள்­களை வாங்­கிய பிறகு கட்­ட­ணத்­தைச் செலுத்­தும் முறை­யில் நிக­ழும் மோச­டி­கள் குறித்து மக்­களை எச்­ச­ரிக்­கும் நோக்­கில் 500,000 துண்­டுப்பிர­சு­ரங்­கள் விநியோகிக்கப்படவுள்ளன. துண்­டுப் பிர­சு­ரங்­களை விநி­யோ­கிக்கத் தள­வாட நிறு­வ­ன­மான நிஞ்சா வேன் காவல்­து­றை­யி­னர், தேசிய குற்­றத்தடுப்பு மன்­றம் ஆகிய அமைப்­பு­க­ளு­ட­ன் இணைந்து செயல்­பட்டு வரு­கிறது.

இந்­தத் துண்­டுப்பிர­சு­ரங்­களில் சில, அர­சாங்க சார்­பற்ற அமைப்பு­களின் மூலம் பணிப்­பெண்­கள், ஊழி­யர் தங்­கு­மி­டங்­களில் வசிக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் ஆகி­யோ­ருக்கு விநி­யோ­கிக்­கப்­படும். வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளும் பணிப்­பெண்­களும் அடிக்­கடி வாங்­கிய பிறகு பொருள்­க­ளுக்­குக் கட்­ட­ணம் செலுத்­து­வ­தால் இந்த முயற்சி எடுக்­கப்­ப­டு­கிறது.

இவ்­விரு பிரி­வி­ன­ரும் பொருள்­களை வாங்­கிய பிறகு கட்­ட­ணம் செலுத்­தும் முறை­யின் மூலம் மேற்­கொள்­ளப்­படும் மோச­டி­க்கு ஆளா­கும் சாத்­தி­யம் அதி­கம் இருப்­ப­தாக 'நிஞ்சா வேன்' நிறு­வ­னத்­தின் தலைமை செயல்­பாட்டு அதி­காரி லீ கிம் ஹொக் கூறி­னார். இந்த முறை­யைக் கொண்டு வாங்­கப்­படும் பொருள் பொட்­ட­லங்­களில் 60 விழுக்­காட்டை தங்­கு­மி­டங்­களில் வசிக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் வாங்­கு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார். ஆண்­டி­று­தி­யில் பலர் அதி­கப் பொருள்­களை வாங்­கு­வ­துண்டு. அத­னால் அந்த கால­கட்­டத்­தில் தனது நிறு­வ­னம் கூடு­தல் விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும் என்று திரு லீ தெரி­வித்­தார்.

விழிப்­பு­ணர்வு முயற்­சி­யை ஒன்­றாக மேற்­கொள்ள 'நிஞ்சா வேன்' சென்ற ஆண்டு நவம்­பர் மாதம் தேசிய குற்­றத்தடுப்பு மன்­றம், காவல்­துறை ஆகிய இரண்­டை­யும் நாடி­யது. இவ்­விரு அமைப்­பு­களும் துண்­டுப்பிர­சு­ரங்­களை வடி­வ­மைத்­தன. தன்­னி­ட­மி­ருந்து பொருள் பொட்­ட­லங்­க­ளைப் பெறும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு 'நிஞ்சா வேன்' இந்த துண்டுப்பிரசுரங்களை விநி­யோ­கித்து வரு­கிறது.

பொருள்­களை வாங்­கிய பிறகு கட்­ட­ணம் செலுத்­தும் முறை­யில் இடம்­பெ­றும் மோசடி, வேலை வாய்ப்பு மோசடி ஆகிய இரண்­டின் தொடர்­பி­லும் இவை விழிப்­பு­ணர்வை வளர்க்­கின்­றன. பணிப்­பெண்­க­ளுக்கு இவற்றை வழங்க 'நிஞ்சா வேன்', மனி­த­வள அமைச்­சு­டன் இணைந்து செயல்­பட்­டது. பணிப்பெண்களுக்காக மனி­த­வள அமைச்சு துண்­டுப்பிர­சு­ரங்­களை இந்­தோ­னீ­சிய மொழி, தகா­லோக், பர்­மிய மொழி, தமிழ் ஆகி­ய­வற்­றிற்கு மொழி பெயர்த்­தது. சென்ற ஆண்டு முற்­பா­தி­யில் வேலை மோச­டிச் சம்­ப­வங்­கள் 16 மடங்கு அதி­க­ரித்­தன. மேலும், மோச­டிச் சம்­ப­வங்­க­ளுக்­குப் பறி­போன தொகை 60,000லிருந்து 6.5 மில்­லி­யன் வெள்ளிக்கு அதி­க­ரித்­தது.

மோசடிகள் குறித்த விழிப்புணர்வை வளர்க்க 500,000 துண்டுப்பிரசுரங்கள் விநியோகிப்பு