'அதிக நேரம் வேலை செய்வது அவசியமாகலாம்'

'அதிக நேரம் வேலை செய்வது அவசியமாகலாம்'

2 mins read
990e4c84-7f3c-4a91-a6a8-e027d9e9757f
-

ஓமிக்­ரான் வகை கிரு­மித்­தொற்றை சிங்­கப்­பூர் எதிர்­நோக்­கி­வ­ரும் வேளை­யில் ஊழி­யர்­கள் கூடு­தல் நேரம் வேலை செய்­வது அவ­சி­ய­மா­க­லாம் என்று முத­லா­ளி­கள், கவ­னிப்­பா­ளர்­கள் ஆகிய இரு தரப்­பினரும் கூறு­கின்­ற­னர். நிறு­வ­னங்­களைத் தொடர்ந்து இயங்கவைக்க இந்த நிலை உரு­வா­க­லாம் என்று அவர்­கள் சொல்­கின்­ற­னர்.

தற்­போ­தைய சூழ­லால் வேலை, தனிப்­பட்ட வாழ்க்கை ஆகிய இரண்டுக்­கும் உள்ள வேறு­பாடு குறைந்­து­வ­ரும் வேளை­யி­லும் இந்­நிலை எழக்கூடும். மோச­மான நோயை ஏற்படுத்தும் சாத்­தி­யம் குறைவு என்­றா­லும் ஓமிக்­ரான் வகை கொவிட்-19 கிருமி வேக­மாகப் பல­ரி­டையே பர­வக்­கூ­டிய ஆற்­றல் கொண்டது. இதனால் ஊழி­ய­ர­ணி­யில் கிருமித்தொற்றுக்கு ஆளான பலர் இயங்­கா­மல் போகக்­கூ­டும். எனவே, மற்றவர்கள் கூடு­தல் நேரம் வேலை பார்க்­க­வேண்டிய நிலைமை எழ­லாம்.

கொள்­ளை­நோய்ப் பர­வல் தொடங்­கி­ய­தி­லி­ருந்து ஏற்­கெ­னவே சிங்­கப்­பூ­ரில் இரண்­டில் ஓர் ஊழி­யர் கூடு­தல் நேரம் வேலை பார்க்க நேரிட்­டது என்று இம்­மா­தம் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்­திய கருத்­தாய்வு ஒன்று தெரி­வித்­தது. 1,000 பேருக்கு மேல் பங்­கேற்ற இந்­தக் கருத்­தாய்­வில் நடு­நிலை ஊழி­யர்­களுக்கே ஆக அதிக வேலைச் சுமை இருப்­ப­தும் தெரி­ய­வந்­தது. வீட்­டி­லி­ருந்து வேலை பார்ப்­ப­தில் இருக்­கும் சவால்­கள், வேலை­யி­லி­ருந்து வில­கிய சக ஊழி­யர்­க­ளுக்­கும் சேர்த்து செயல்­ப­டு­வது போன்­றவை கருத்­தாய்­வில் பங்­கேற்ற சிலர் முன்­வைத்த பிரச்­சி­னை­கள்.

அர­சாங்­கத் துறை­யைப் பொறுத்த வரை, இது­போன்ற பிரச்­சி­னை­க­ளைக் கையாள சில முயற்­சி­களை எடுக்­க­லாம் என்று பொதுச் சேவைப் பிரி­வின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

"வருங்காலத்தில் கொவிட்-19ஐ சகித்­துக்­கொண்டு வாழும்போது வீட்­டி­லி­ருந்து வேலை பார்ப்­பது, அலு­வ­ல­கத்­தில் வேலை செய்­வது ஆகிய இரண்­டை­யும் அர­சாங்­கத் துறை பின்­பற்­ற­வுள்ள வேளை­யில், வேலை, தனிப்­பட்ட வாழ்க்கை ஆகிய இரண்­டுக்­கும் வேறு­பாடு குறை­வதை சரி­யா­கக் கையா­ளா­விட்­டால் அது பெரிய பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுக்­க­லாம்," என்று அவர் குறிப்­பிட்­டார்.