லத்தின் அமெரிக்க நாடுகளுடன் தடையற்ற வர்த்தக உடன்பாடு

லத்தின் அமெரிக்க நாடுகளுடன் தடையற்ற வர்த்தக உடன்பாடு

1 mins read
1b024337-87a4-4292-a751-064a13b2e703
பசிபிக் கூட்டணி மாநாட்டில் முன்பதிவு செய்யப்பட்ட காணொளி வழி பேசிய பிரதமர் லீ சியன் லூங். படம்: இபிஏ -

சிலி, கொலம்­பியா, மெக்­சிகோ, பெரு ஆகிய நாடு­க­ளைக் கொண்ட குழு­வு­டன் சிங்­கப்­பூர் தடை­யற்ற வர்த்­தக உடன்­பாட்­டைச் செய்­து­கொண்­டுள்­ளது. இந்த ஒப்­பந்­தத்­தின் மூலம் உல­கின் எட்­டா­வது ஆகப் பெரிய பொரு­ளி­ய­லான இக்­கு­ழு­வு­டன் சிங்­கப்­பூ­ருக்­குக் கூடு­தல் தொடர்பு ஏற்­படும்.

'பிஏஎஸ்­எ­ஃப்­டிஏ' எனும் 'பசி­பிக் கூட்டமைப்பு-சிங்­கப்­பூர்' ஒப்­பந்­தம், சிலி, மெக்­சிகோ, கொலம்­பியா, பெரு ஆகி­ய­வ­றக்­கைக் கொண்ட 'பசி­பிக் அல­யன்ஸ்' கூட்டமைப்புக்கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடையே கையெ­ழுத்­தா­கி­யுள்ள முதல் நேரடி தடை­யற்ற வர்த்­தக உடன்­பாடு. இந்­தக் கூட்­ட­மைப்பின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யின் மதிப்பு 2.6 டிரில்­லியன் வெள்­ளிக்­கும் அதி­கம்.

"பசி­பிக் கூட்டமைப்புக்கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடையே உள்ள பங்­கா­ளித்­து­வத்­தில் இது ஒரு மைல்­கல். இவ்­விரு வட்­டா­ரங்­க­ளுக்­கும் இடை­யில் பலர் நினைப்­ப­தை­விட அதி­கம் தொடர்­புள்­ளது," என்று பசி­பிக் கூட்­டமைப்பு மாநாட்­டில் முன்­பதிவு செய்­யப்­பட்ட காணொளி வழி பிர­த­மர் லீ சியன் லூங் குறிப்­பிட்­டார்.

"நாங்­கள் இருக்­கும் வட்­டா­ரங்­களில் நாம் ஆற்­றும் பங்கை மேம்­படுத்த பசி­பிக் கூட்டமைப்புடன் இணைந்து செயல்­பட ஆவ­லாக இருக்­கி­றோம்," என்­றும் திரு லீ சொன்­னார்.