மொத்தம் 400 மின்சிகரெட்டுகள், அவற்றை செயல்படுத்துவதற்குத் தேவையான 8,100 'ரீஃபில் பாட்ஸ்' எனும் பொருள்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மலேசியாவிலிருந்து கடத்தல்காரர்கள் சிலர் பழங்களைக் கொண்டுவரும் லாரியில் இவற்றைக் கடத்தி வர முயன்றனர். அதிகாரிகள் அவர்களை முறியடித்தனர்.
மலேசியரான லாரியின் ஓட்டுநர், அவரின் உதவியாளர் ஆகிய இருவரும் விசாரணைக்காக சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். சென்ற மாதம் 28ஆம் தேதியும் இதேபோல் சில மின்சிகரெட்டுகளும் 'ரீஃபில் பாட்ஸ்' பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
தனிப்பட்ட முறையில் பயன்படுத்த மின்சிகரெட்டுகளை இணையத்தில் வாங்கி சிங்கப்பூருக்குத் தருவிக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அதிகபட்சமாக 10,000 வெள்ளி அபராதமும் ஆறு மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

