மானபங்கப்படுத்திய நடன ஆசிரியருக்குச் சிறை, பிரம்படி

மானபங்கப்படுத்திய நடன ஆசிரியருக்குச் சிறை, பிரம்படி

1 mins read
726016b1-17d2-469c-8773-dcfcfabad9c3
-

பகு­தி­நேர நடன ஆசி­ரி­யர் ஒரு­வர் இரண்டு சிறு­வர்­களை வெவ்­வேறு நேரங்­களில் அவர்­க­ளின் தொடக்­கப் பள்­ளி­களில் மான­பங்கப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்.

குற்­ற­வாளி­யான அந்த 42 வயது சிங்­கப்­பூர் ஆட­வ­ருக்கு மூவாண்டு­கள் 10 மாதச் சிறைத் தண்­ட­னை­யும் ஆறு பிரம்­ப­டி­களும் விதிக்­கப்­பட்டுள்­ளன.

மூன்று மான­பங்­கக் குற்­றச்­சாட்டு­களை அவர் ஒப்­புக்­கொண்­டார். பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளின் அடை­யா­ளத்­தைப் பாது­காக்க குற்றவா­ளி­யின் பெயரை வெளி­யிட அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை.

2016ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அப்போது 10 வயதான சிறுவனை ஆடவர் மானபங்கப்படுத்தினார். 2019ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் வேறொரு பள்­ளி­யில் ஒரு 10 வயது சிறு­வ­னை அவர் மான­பங்­கப்­ப­டுத்­தி­ய­தும் நீதி­மன்ற விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.

அதற்­குப் பிறகு 2020ஆம் ஆண்டு அதே சிறு­வனை மீண்­டும் மான­பங்­கப்­ப­டுத்­தி­னார்.

பாதிக்­கப்­பட்ட இரு சிறு­வர்­களும் 2020ஆம் ஆண்டு பாலி­யல் விழிப்­பு­ணர்வு வகுப்­பு­க­ளுக்­குச் சென்ற பிறகு தங்­க­ளின் ஆசி­ரி­யர்­க­ளி­ட­மும் பெற்­றோ­ரி­ட­மும் நடந்­த­தைப் பற்­றித் தெரி­யப்­ப­டுத்­தி­னர்.

அதற்­குப் பிறகு காவல்­து­றை­யி­ன­ரி­டம் புகார்­கள் கொடுக்­கப்­பட்­டன.

தனது ஆசி­ரி­யர்­கள் பட்­டி­ய­லி­லி­ருந்து அந்த ஆடவர் நீக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தற்­போது அவரை எந்­தப் பள்­ளி­யும் நிய­மிக்­க­வில்லை என்­றும் கல்வி அமைச்சு ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸுக்கு அளித்த அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

"மாண­வர்­க­ளுக்­குப் பாது­காப்­பான கற்­றல் சூழலை வழங்க கல்வி அமைச்சு கட­மைப்­பட்­டுள்­ளது," என்று கல்வி அமைச்­சின் பேச்­சாளர் கூறி­னார்.