200 பேருக்கு வேகமாக பரவும் ஓமிக்ரான் மரபுவழிக் கிருமி

200 பேருக்கு வேகமாக பரவும் ஓமிக்ரான் மரபுவழிக் கிருமி

1 mins read
5fb3abff-2e9b-4508-b2d1-041031ec5a64
-

இம்­மா­தம் 25ஆம் தேதி வரை திரட்­டப்­பட்ட தர­வு­க­ளி­லி­ருந்து மொத்­தம் 48 உள்­ளூர்வாசி­க­ளி­ட­மும் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்த 150 பேரி­ட­மும் BA.2 ஓமிக்­ரான் மர­பு­வ­ழிக் கிருமி இருப்­பது தெரியவந்­துள்­ளது.

BA.2 ஓமிக்­ரான் மர­பு­வ­ழிக் கிருமி, BA.2 ஓமிக்­ரான் மர­பு­வழிக் கிரு­மி­யை­விட வேக­மா­கப் பர­வக்­கூ­டி­யது என்­றும் அவற்­றுக்­கிடையே எவ்­வித குறிப்­பி­டத்­தக்க மருத்­துவ மாற்­றங்­கள் இருப்­ப­தில்லை என்­றும் டென்­மார்க் சுகா­தார அமைப்­பு­கள் தெரி­வித்­தி­ருப்­ப­தாக, சிங்­கப்­பூர் சுகா­தார அமைச்சு நேற்று கூறி­யது.

"BA.2 ஓமிக்­ரான் மர­பு­வ­ழிக் கிருமி பற்­றி­யும் அதன் கடு­மை­யான போக்கு, தடுப்­புச் சக்தி ஆற்­றல், வேக­மா­கப் பர­வும் தன்மை போன்­றவை எவ்­வித விளை­வு­களை ஏற்­படுத்தும் என்­பது குறித்த கூடு­தல் தரவு நமக்­குத் தேவைப்­ப­டு­கிறது," என்று சுகா­தார அமைச்­சின் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

BA.1 ஓமிக்­ரான் மர­பு­வ­ழிக் கிருமி தற்­போது உல­க­ள­வில் 98% சம்­ப­வங்­களில் காணப்­ப­டு­கிறது.

ஆனால் டென்­மார்க்­கில், இம்­மாத இரண்­டா­வது வாரத்­தில் ஆதிக்­கம் செலுத்­திய BA.2 ஓமிக்­ரான் மர­பு­வ­ழிக் கிருமி, BA.1 கிரு­மியை ஓரங்­கட்­டி­யது.

பிரிட்­டிஷ் சுகா­தா­ரப் பாது­காப்பு அமைப்பு, இந்த BA.2 ஓமிக்­ரான் மர­பு­வ­ழிக் கிரு­மியை அணுக்க மாகக் கண்­கா­ணித்து வரு­கிறது.

BA.2 கிருமி, BA.1 கிரு­மியை விட ஒன்­றரை மடங்கு அதி­க­மா­கப் பர­வக்­கூ­டி­யது என்று டென்­மார்க்­கின் தலை­சி­றந்த தொற்­று­நோய் எதிர்ப்பு அமைப்பான ஸ்டெட்­டன்ஸ் சீரம் கழ­கம் தெரி­வித்­துள்­ளது.