என்யுஎஸ் மாணவர்களுக்கு உதவும் புதிய தளம்

என்யுஎஸ் மாணவர்களுக்கு உதவும் புதிய தளம்

2 mins read
98216dc5-a9d3-4cb6-b57a-b131ebaa2e44
புதிய தளம் இயங்கும் முறையை அறிமுக விழாவில் பார்வையிடும் (இடமிருந்து) என்யுஎஸின் மூத்த கல்வி நிர்வாகி பேராசிரியர் ஹோ டெக் ஹுவா, கல்வி அமைச்சர் சான் சுன் சிங், என்யுஎஸ் தலைவர் பேராசிரியர் டான் எங் சாய். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கம் (என்­யுஸ்) அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள புதிய தளத்­தின் உத­வி­யோடு அப்­பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பயி­லும் மாண­வர்­கள் கல்வி கற்­கும் அதே சம­யம், குறு­கிய கால வேலை­க­ளி­லும் சேரத் தொடங்­கி­யுள்­ள­னர்.

புதிய தளத்தை கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் நேற்று என்­யு­

எ­ஸில் தொடங்­கி­வைத்­தார்.

அத்­து­டன், 400,000 என்­யு­எஸ் மாண­வர்­க­ளை­யும் முன்­னாள் மாண­வர்­க­ளை­யும் இணைக்க இலக்கு கொண்­டுள்ள கட்­ட­மைப்­புத் தளத்தை அவர் தொடங்­கி­வைத்­தார்.

கடந்த ஆண்டு டிசம்­பர் மாதத்­தில் இன்­டர்ன்­ஷிப்-எஸ்-எ-சர்­விஸ் என்று அழைக்­கப்­படும் 'வேலைத் தளம்' அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

அதைப் பயன்­ப­டுத்தி என்­யு­எஸ் மாண­வர்­கள் குறு­கியகால வேலை­களில் சேர்ந்து அனு­ப­வம் பெற­லாம். அத்­து­டன், வரு­மா­னம் ஈட்­ட­லாம்.

இத்­திட்­டம் மூலம் இவ்­வாண்டு இறு­திக்­குள் அவர்­கள் பயி­லும் வெவ்­வேறு பாடங்­க­ளுக்­குத் தேவை­யான மதிப்­பெண்­களை அவர்­கள் பெற­லாம்.

அவர்­கள் பட்­டம் பெறு­வ­தற்கு இது பயன்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தத் திட்­டத்­தில் தொழில்­நுட்ப நிறு­வ­னம் ஓரக்­கல், பய­ணச் சேவை செய­லி­யான கிராப், சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் உட்­பட 60க்கும் அதி­க­மான தொழில்­துறை பங்­கா­ளி­கள் பங்­கெ­டுக்­கின்­றன.

தனது மாண­வர்­க­ளுக்குப் பல்­வேறு துறை­க­ளுக்­கி­டை­யி­லான கற்­றல் அனு­ப­வத்தை ஏற்­ப­டுத்­தித் தர என்­யு­எஸ் மேற்­கொண்டு வரும் முயற்­சி­க­ளின் ஒரு பகு­தியாக இந்­தப் புதிய தளம் அமை­கிறது என்று நேற்று நடை­பெற்ற அறி­முக விழா­வில் என்­யு­எஸ் தலை­வர் டான் எங் சாய் தெரி­வித்­தார்.

புதிய தளம் மாண­வர்­க­ளுக்கு மேலும் பல வாய்ப்­பு­களை வழங்­கு ­வ­தாக அவர் கூறி­னார்.

வெறும் கல்வி அறிவு மட்­டும் பெறா­மல் பல்­வேறு துறை­க­ளைச் சேர்ந்த வேலை­களில் மாண­வர்­கள் அர்த்­த­முள்ள அனு­ப­வங்­க­ளைப் பெற இத்­திட்­டம் வழி­வ­குக்­கிறது என்­றார் அவர்.

இத்­திட்­டம் பட்­டம் பெறும் மாண­வர்­க­ளுக்­குத் தேவை­யான திறன்­

க­ளை­யும் வேலை அனு­ப­வத்­தை­யும் தரும் என்று பேரா­சி­ரி­யர் டான் தெரி­வித்­தார்.

அது­மட்­டு­மல்­லாது, திற­னா­ளர்­

க­ளு­டன் என்­யு­எஸ் சமூ­கத்­திற்கு நேரடி தொடர்பைப் புதிய தளம் ஏற்­ப­டுத்­தித் தரும் என்­றார் அவர்.