மோசடியில் ஈடுபட்டதாகவும் பிறர் சார்பாக சட்டவிரோதமாகப் பணப் பரிவர்த்தனைகளைச் செய்ய உதவி யதாகவும் சந்தேகிக்கப்படும் 259 பேரிடம் காவல்துறையினர்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
564 மோசடி வழக்குகளுடன் இவர்களுக்குத் தொடர்பு உள்ளது என்று நம்பப்படுகிறது.
இந்த மோசடிக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் $5.9 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்துவிட்டதாக காவல்துறை
யினர் நேற்று தெரிவித்தனர்.
இணையம் மூலம் நடத்தப்பட்ட காதல் மோசடி, மின் வர்த்தகம், ஆள் மாறாட்டம், முதலீடுகள், வேலை மற்றும் கடன் மோசடி ஆகிய குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.
சந்தேகப் பேர்வழிகளில் 170 ஆடவர்களும் 89 பெண்களும் அடங்குவர். அவர்கள் 16 வயதுக்கும் 80 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். இம்மாதம் 14ஆம் தேதியிலிருந்து 27ஆம் தேதி வரை வர்த்தக விவகாரத் துறையைச் சேர்ந்த
அதிகாரிகளும் காவல்துறையின் ஏழு நிலப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் இரண்டு வார அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதல், உரிமம் இல்லாமல் கட்டணம் செலுத்தும் சேவைகளை வழங்குதல் போன்ற குற்றங்கள் தொடர்பாக சந்தேகப் பேர்வழி
களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டு கள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, $500,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். உரிமம் இல்லாமல் கட்டணம் செலுத்தும் சேவை வழங்குபவர்களுக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறை, $125,000க்கு மேல் போகாமல் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

