சுற்றுப்பயணிகள் சிங்கப்பூரில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும்போது அவர்களுக்குக் கூடுதல் பாதுகாப்புடனான அனுபவத்தை வழங்க சுகாதாரப்
பராமரிப்புச் சேவை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து சுற்றுப்பயணத் துறை வர்த்தகங்கள் பரிசீலனை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லையெனில் வருகையாளர்கள் பலர் செல்லாத நாட்களில் சுற்றுப்பயணிகள் அங்கு செல்ல ஏற்பாடு செய்யலாம்.
சுற்றுப்பயணத் துறைக்காக நேற்று புதிதாக இரண்டு வழிகாட்டி நெறிமுறைகள் அறிமுகப்
படுத்தப்பட்டன. அவற்றில் இந்த உத்திகளும் அடங்கும்.
கொவிட்-19 சூழலால் உரு
வாகியுள்ள புதிய வழக்கநிலைக்கு ஏற்ப சுற்றுப்பயணத் துறை செயல்பட உதவும் நோக்கில் இவை முன்வைக்கப்பட்டுள்ளன. கூடுதல் அனைத்துலகப் பயணிகளை வர
வழைக்க சிங்கப்பூர் தயாராகி வரும் நிலையில் இந்த வழிகாட்டி நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்
பட்டுள்ளன.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு வழிகாட்டி நெறிமுறையில் சுற்றுப்பயணிகளுக்குத் தேவையான
சுற்றுலா, வாழ்வியல் தகவல்கள் இடம்பெறுகின்றன.
மற்றொரு வழிகாட்டி நெறி
முறையில் பயனீட்டாளர்களை நன்கு புரிந்துகொள்ள உதவும் வகையில் சுற்றுப்பயண வர்த்தகங்
களுக்குத் தேவையான உத்திமுறைகள் இடம்பெறுகின்றன.
சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்துக்கும் சிங்கப்பூர் தேசிய சுற்றுப்பயண முகவர்கள் சங்கம், சிங்கப்பூர் சுற்றுலாத் தலங்கள் சங்கம், சிங்கப்பூர் மாநாடு, கண்காட்சி ஏற்பாட்டாளர் மற்றும் விநியோகிப்பாளர் சங்கம், சிங்கப்பூர் ஹோட்டல்கள் சங்கம், சிங்கப்பூர் சுற்றுப்
பயண வழிகாட்டிகள் சங்கம் ஆகியவற்றுக்கும் இடையிலான
பங்காளித்துவத்தின் மூலம் இந்த வழிகாட்டி நெறிமுறைகள் அறி
முகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

