பிப்ரவரி 4ல் கூட்டு மாணவர் சேர்க்கைத் திட்ட முடிவுகள்

பிப்ரவரி 4ல் கூட்டு மாணவர் சேர்க்கைத் திட்ட முடிவுகள்

2 mins read
8fe37f38-a5e2-4200-81da-3505cff8888f
-

உயர்­நி­லைக் கல்வி முடித்த மாண­வர்­க­ளின் கூட்டு மாண­வர் சேர்க்­கைத் திட்டத்தின் முடி­வு­கள் அடுத்த மாதம் 4ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளி­வ­ரும் என்று கல்வி அமைச்சு நேற்று அறி­வித்­தது.

குறுஞ்­செய்தி அல்­லது கல்வி அமைச்­சின் இணை­யப்­பக்­கம் மூலம் முடி­வு­களை மாண­வர்­கள் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

அண்­டு­தோ­றும் நடை­பெ­றும் கூட்டு மாண­வர் சேர்க்­கைத் திட்டத்தின் வழி தொடக்­கக் கல்­லூ­ரி­கள், மில்­லே­னியா கல்­விக் கழ­கம், சிங்­கப்­பூ­ரில் உள்ள ஐந்து பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­கள், தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கம் ஆகி­யவை வழங்­கும் பாடத் திட்­டங்­களில் மாணர்­கள் சேர­லாம்.

தொடக்­கக் கல்­லூரி, மில்­லே­னியா கல்­விக் கழ­கத்­தில் சேர்ந்து பயில இடம் கிடைக்­கும் மாண­வர்­கள் அடுத்த மாதம் 7ஆம் தேதி காலை 7.30 மணிக்கு அவர்­க­ளுக்­குக் கிடைத்­தி­ருக்­கும் பள்­ளிக்­குச் செல்ல வேண்­டும்.

அன்று அவர்­க­ளால் பள்­ளிக்­குச் செல்ல முடி­யா­வி­டில், பள்­ளி­யு­டன் தொடர்­பு­கொண்டு அங்கு சேர்ந்து பயி­லப்­போ­வதை உறுதி செய்­து­கொள்­ள­லாம், அவ்­வாறு செய்­யும் மாண­வர்­க­ளுக்­கான இடம் பாதுகாக்­கப்­படும் என்று கல்வி அமைச்சு கூறி­யது.

பல­து­றைத் தொழிற்­கல்­லூரி அல்­லது தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தில் சேர்ந்­து பயில இடம் கிடைக்­கும் மாண­வர்­க­ள் அதற்குப் பதிவு செய்­வது குறித்த விவ­ரங்­கள் கொண்ட கடி­தங்­கள் அனுப்­பி­வைக்­கப்­படும்.

வேறு தொடக்­கக் கல்­லூ­ரிக்கு மாற விரும்­பும் மாண­வர்­கள், அவர்­கள் செல்ல விரும்­பும் தொடக்­கக் கல்­லூ­ரி­யு­டன் தொலை­பேசி அல்­லது மின்­னஞ்­சல் மூலம் தொடர்பு­ கொள்­ள­லாம்.

மாண­வர்­க­ளின் மேல்­மு­றை­யீட்டு விண்­ணப்­பங்­கள் குறித்து முடி­வெ­டுக்­கும் அதி­கா­ரம் அந்­தந்த தொடக்­கக் கல்­லூ­ரி­க­ளிடம் உள்­ளது. தொடக்­கக் கல்­லூ­ரி­யில் உள்ள இடங்­கள், மாண­வர்­கள் பெற்ற மதிப்­பெண்­கள் ஆகி­ய­வற்­றைப் பொறுத்து முடி­வெ­டுக்­கப்­படும்.

மில்­லே­னியா கல்­விக் கழ­கத்­துக்கு மாற விழை­வோர் அப்­பள்­ளி­யு­டன் தொலை­பேசி அல்­லது மின்­னஞ்­சல் மூலம் தொடர்­பு­கொள்ள வேண்­டும்.

வேறொரு பல­து­றைத் தொழிற்­கல்­லூரி அல்­லது தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தின் இரண்டு ஆண்­டுகால உயர் நைடெக் பாடத் திட்­டத்­துக்கு மாற விரும்­பு­ப­வர்­கள் கூட்டு மாண­வர் சேர்க்­கைப் பயிற்சி மேல்­மு­றை­யீடு இணை­ய வா­சல் மூலம் விண்­ணப்­பம் செய்­ய­லாம்.

கூட்டு மாண­வர் சேர்க்­கைப் பயிற்சி மூலம் எவ்­வி­தப் பள்­ளி­யி­லும் இடம் கிடைக்­காத மாண­வர்­கள் அதே இணை­ய­வா­சல் மூலம் மேல்­மு­றை­யீடு செய்­ய­லாம் என்று கல்வி அமைச்சு கூறி­யது.

பிப்­ர­வரி 4ஆம் தேதி காலை 9 மணி முதல் பிப்­ர­வரி 9ஆம் தேதி மாலை 4 மணி வரை மேல்­மு­றை­யீடு செய்­ய­லாம்.

மேல்­மு­றை­யீட்­டுக்­கான முடி­வு­கள் அடுத்த மாதம் 22ஆம் தேதி வெளி­வ­ரும்.