சிங்கப்பூரின் மையப் பகுதியில் சில்லறை வர்த்த வாடகை சென்ற ஆண்டு நான்காம் காலாண்டில் 0.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதற்கு முன் மூன்று மாதங்களில் வாடகை 2.7 விழுக்காடு குறைந்ததென நகர மறுசீரமைப்பு ஆணையம் வெளியிட்ட தகவல்கள் தெரிவித்தன.
எனினும், சென்ற ஆண்டு முழுவதையும் பார்க்கும்போது சில்லரை வர்த்தக வாடகை 6.8 விழுக்காடு குறைந்தது. இருந்தாலும், 2020ஆம் ஆண்டு இந்த சில்லறை வர்த்தக வாடகை 14.7 விழுக்காடு சரிந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டு பதிவான விகிதம் குறைவு.

