தனது 50ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் 'சிங்கே' ஊர்வலம் அடுத்த மாதம் ஜூவல் சாங்கியில் தொடங்கும். ஒன்றைரை மணிநேரம் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சி அடுத்த மாதம் 12ஆம் தேதியன்று நேரடியாக இணையத்தில் ஒளிபரப்பாகும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.
"கோலாகலமாக அரங்கேறவுள்ள இவ்வாண்டின் நிகழ்ச்சி அனைவரும் சரிசமமாகக் கண்டு ரசிக்கக்கூடிய வகையில் அமையும். சாகசங்களும் 'ஃபுளோர் புரொஜெக்ஷன்ஸ்' எனும் தரையில் ஜொலிக்கும் விளக்குப் படைப்புகளும் இதை மறக்கமுடியாத ஒரு நிகழ்வாக உருவாக்கும்," என்று திரு லீ ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு நிகழ்ச்சியில் பல்லின சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் படைப்புகள் முக்கியப் பங்கு வகிக்கும். சிங்கப்பூரின் நான்கு இனங்களின் திருமணங்களைச் சித்திரிக்கும் படைப்புகளைக் கொண்ட அங்கமும் இருக்கும்.

