தாய்மொழியை போற்றுவோம், தமிழைப் பேணி வளர்ப்போம்

தாய்மொழியை போற்றுவோம், தமிழைப் பேணி வளர்ப்போம்

4 mins read
7db2c987-a63c-47fc-bb56-e7d10c6ff2b2
-

முரசொலி

காலத்­திற்கு ஏற்ப மாற வேண்­டும். மாற மறுத்­தால் காலம் நம்மை பின்­னுக்­குத் தள்­ளி­வி­டும். இன்­றைய உல­கில் இது எதற்­குப் பொருந்­து­கி­றதோ இல்­லையோ ஊட­கத் துறைக்கு மிக­வும் பொருத்­த­மான சிந்­தனை.

நிறு­வன உரி­மை­யா­ளர்­கள், பங்­கு­தா­ரர்­க­ளின் நல­னைப் பிர­தா­ன­மாக கருத்­தில்­கொண்டு செயல்­படும் ெசய்­தித்­தாள்­களும் ஊட­கங்­களும் ஓர­ள­வாவது லாபநோக்­கத்­து­டன்­தான் செயல்­பட முடி­யும்.

லாப நோக்­கத்தை ஒதுக்­கி­விட்டு உண்­மைத் தக­வல்­களை மக்­க­ளுக்கு கொண்டு செல்­ல வேண்டுமானால் உரிமையாளர்கள், பங்குதாரர்களின் நெருக்குதல் இருக்கக்கூடாது.

வருவாயில் மட்டுமே கவனம் செலுத்தாமல் இருந்ததால்தான் பத்திரிகைகளும் ஊடகத் துறையும் சிறப்பாக செயல்பட முடியும்.

இந்த மைய நோக்கத்துடன்தான் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சாவ் பாவ், ெபரித்தா ஹரியான், தமிழ் முரசு ஆகிய செய்தித்தாள்களை வெளியிடும் எஸ்பிஎச் நிறுவனம் அதன் ஊடகப் பிரிவை தனியாகப் பிரித்து எஸ்பிஎச் ஊடக அறக்கட்டளை யாக (எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்) உருமாற்றி புதிய வடிவம் தந்துள்ளது.

சிங்கப்பூரின் பல்வேறு இனங்களை ஒன்றிணைத்து ஒவ்வோர் இனத்துக்கும் அதன் உரிய முக்கியத் துவத்தைக் கொடுப்பதற்காக ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் என நான்கு மொழிகளுக்கும் அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்தந்த இனத்தின் தாய்மொழியைப் போற்றி வளர்ப்பதும் இன்றியமையாதது.

புதிய வடிவெடுத்து உள்ள எஸ்பிஎச் ஊடக அறக்கட்டளை சிங்கப்பூரின் கலாசாரம், பாரம்பரியம், ஆகியவற்றை கட்டிக்காப்பதுடன், அவற்றை பள்ளி மாணவர்களிடம் கொண்டு செல்லவும் எண்ணம் கொண்டுள்ளது.

அத்துடன், மற்ற நாட்டு அமைப்புகளுடனும் இணைந்து தாய்மொழி ஊடகத்தை ேமம்படுத்தவும் அவரவர் தாய்மொழியை வாழும் மொழியாகக் கொண்டு செல்லவும் புதிய ஊடக அறக்கட்டளை எண்ணம் கொண்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, பரபரப்பான இன்றைய உலகச் சூழலில் எல்லாவற்றிலும் சற்றே அவசரம் காட்டும் இளையர்களைப் பிடித்து நிறுத்தி அவர்களுடன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதோ இல்லை ஏதாவது ஒன்றில் அவர்களை ஈடுபடுத்துவதோ மிகவும் சவாலான காரியமாக உள்ளது.

அவர்களுக்கு உரிய தகவல் உரிய நேரத்தில் சென்றடைய வேண்டுமானால் அதற்கென தனி சிந்தனை, தனி முயற்சி தேவை.

எழுத்து வடிவைவிட அவர்கள் விரும்பிப் பார்ப்பது, கேட்பது காணொளிகளையும் இைணயத்தள ஒலிப்பதிவுகளையும்தான். புதிய ஊடக அமைப்பு இதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

இளையர்களை ஈர்ப்பது ஒருபக்கம் இருக்கட்டும். அதற்காக, காலங்காலமாக அச்சுப் பிரிதியையே தங்கள் உயிர்மூச்சாக நினைத்து காலை எழுந்தவுடன் செய்தித்தாளை படிக்காவிடில் அன்றைய பொழுது வீண் என நினைக்கும் முதியோரை விட்டுவிட முடியுமா. வேகமாக மின்னிலக்கமயமாகி வரும் உலகில் அவர்களை அரவணைத்துச் செல்ல வேண்டும்.

அதேவேளையில், காலந்தோறும் விசுவாசமாக செய்தித்தாள்களை வாசித்து வருவோரையும் விட்டுவிடாது தக்கவைத்துக்ெகாள்ள வேண்டும். இதை எல்லாம் செவ்வனே செய்யவும் புதிய ஊடக அறக்கட்டளை பாடுபடும்.

சமூகத்தில் நன்மதிப்பு பெற்று, சமுதாயத்தில் அக்கறைக்குரிய அம்சங்களைப் புரிந்துகொண்டு செயல்படுவதும் புதிய ஊடக அமைப்பின் குறிக்கோள்களில் ஒன்று.

புதிய ஊடக அமைப்பு குறித்து செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் கோ பூன் வான், அது சிங்கப்பூர் சமூகத்துக்கு சேவையாற்றும் விதமாக அமைய வேண்டும் என்று விளக்கினார்.

அவ்வாறு செய்தால்தான் உள்ளூர் செய்திகள் தொடர்பில் சிங்கப்பூரர்கள் வெளிநாட்டு ஊடகங்களை நாட ேவண்டியிருக்காது என்று அவர் விளக்கினார். வெளிநாட்டு ஊடகங்கள் இங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் சிங்கப்பூர் கொண்டிருக்கும் பார்வையைக் கொண்டிருக்காது என்ற திரு கோ, அதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்தினார்.

எல்லாம் சரி, இவை அனைத்தையும் செய்ய வேண்டுமானால் அதற்கான வளம், வசதி இருக்க வேண்டுமல்லவா. வெறுங்கையால் முழம் போட முடியாது.

ஊடகத் துறையை மேம்படுத்த, தமிழை, தாய்மொழியை வளர்க்க போதிய திறனாளர்கள் வேண்டும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மொழியில் தகுதியுடையவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து பணியில் ஈடுபடுத்துவது அவசியம்.

இந்தப் பின்னணியில்தான் எஸ்பிஎச் ஊடக அறக்கட்டளை பயிற்சிக் கழகம் ஒன்றை உருவாக்கி உள்ளது.

அந்தப் பயிற்சிக் கழகம் உலகப் பிரிசித்திப் பெற்ற ஊடகப் பயிற்சிக் கழகங்களான ஃபுளோரிடா வின் போய்ன்டர், ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் ராய்ட்டர்ஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் ஜர்னலிசம் ஆகிய வற்றுடன் இணைந்து செய்தியாளர்களுக்குப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்து வருகிறது.

இங்கு பயிற்சி பெறும் செய்தியாளர்கள் சிறந்த முறையில் செய்தித் தகவல்களை கச்சிதமாக மக்களுக்கு எடுத்துக் கூறுவர் என்று எதிர்பார்க்கலாம்.

இதன்மூலம் பிரச்சினைகள் பற்றிய தெளிவை ஏற்படுத்தி மக்களுக்கு சரியான தகவல்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று சொல்வது உண்டு. பாலர் முரசில் தொடங்கி, மாணவர் முரசு, இளையர் முரசு, என பல வழிகளில் சிங்கப்பூரில் உள்ள தமிழ் குடும்பங்களை பல்கலைக் கழகங்களாக உருவாக்க எங்களால் ஆன முயற்சி களை எடுத்து வருகிறோம்.

அச்சுப் பிரதி, மின்னிலக்கப் பிரதியுடன் நீண்டகால வாசகர்களாக உள்ள முதியோரையும் அரவணைத்து சமூகம் ஒன்றிணைய, தமிழை வளர்க்க தமிழ் முரசு அயராது உழைக்க தயார்.

அதற்கு ஈடாக வாசகர்கள் எங்கள் பணியை அங்கீகரித்து தொடர்ந்து ஆதரவு வழங்கிட மிகத் தாழ்மையுடன் வேண்டுகிறோம்.